Wednesday, July 31, 2013

ஏற்கனவே இறந்து விட்டவன்.

அறையெங்கும் பரவியிருக்கும் புகை மண்டலம்...
ஆறாவதாய் விரலில் நகர்ந்து முன்னால் விழும் சாம்பல்....
என் மரணத்தை ஒரு வேளை முன் கூட்டியே அறிவிக்காமலும் இருக்கலாம்.....
இந்த கடிதம் உரிஞுசும் பேனா மை போல என் உயிர் நாட்கள்,
துளி துளியென உரிஞசப்பட்டு உலரத்துவங்கிவிட்டது,
ஆரம்ப நாட்களில் புகைப்பழக்கம் ஒரு சாகச சந்தோசத்தை அளித்தது...
நண்பர்களிடம் சிறு உயரத்தையும்......
பின் கன்னியர்களிடம் ஒரு புன்னகையயை....நான் மிகவும் விரும்பும் நடிகனின் பிம்பத்தை...
என் வெறுமையான பக்கங்களை அது நிரப்புவதாய் ....
தனிமயை கரைப்பதாய்...கற்பனையை வளர்ப்பதாய் ,,,,போலியாக நம்ப ஆரம்பித்தேன்...
ஆரம்பத்தில் காலையில் ஒன்று, தேநீருக்கு ஒன்று, மதிய உணவிற்கு பிறகு ஒன்று, இரவு தூங்கும் முன் ஒன்று,
ஒன்று இரன்டானது  ,பின் மூன்றானது,,எண்னிக்கை தெரியவில்லை நேரத்திரற்கு ஒன்று என்றானது,,,,,,
புகைப்பழக்கம் எனக்கடிமையாக இருந்த காலம் மெல்ல மெல்ல மாறி
அதற்கு அடிமையாய் நான் மாறினேன் பின்னொரு நாளில் ......
கூடவே மதுவும் வந்தது ..பல நேரஙகளில் என்னுடைய அனுமதி பெறாமலேயே
இரைப்பையை மதுவும் ,நுரையீரலை புகையும் ஆக்கிரமித்தன ,
ரத்தம் முழுக்க ஆல்ஹகாலும் ,நிக்கோடினும் மாறி மாறி கலந்தது.
உதடு கறுத்து பற்கள் கறையேறி நெஞுசுகூடு தூக்கி ...நடக்க உடல் வலுவின்றி நடு நடுங்க மயக்கமுற்று
ரத்தம் கக்கி வாந்தி எடுத்த போது தெரியவந்தது புற்று நோய் என்னை விழுங்கி கொண்டிருப்பது ...
மருத்துவ பரிசோரதனை புற்று நோயை உறுதி செய்த்து...நோய் முற்றி விட்டது என்றார்கள் மருத்துவர்கள்.
சிகிச்ச்சை பலனலளிக்காமல் இறப்பின் நாட்களை எண்ணி கொண்டிருக்கும் நொடிகள் மிக கணமானது கொடூரமானது.....
இறந்து பொவேன் எனதெரிந்தால்  ,இன்னமும் வாடகை வீட்டில் வசிக்கும் என் ஒருவனின் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும்
அன்பே வடிவான என் மனைவி,அழகே உருவான  இரன்டு மகன்கள் ,வயதான அப்பா, அம்மா இவர்களின் கதி என்னாவது.
நம்மை மெல்ல கொல்லும். மரண்த்தை விரைவில் கூட்டிவரும் ,குடும்பத்தை அனாதையாக்கி நடுதெருவில் நிறுத்தும்.
  
மது/புகை குடிக்கும்/பிடிக்கும் ஒவ்வொரு நொடியும் நம்முடைய உயிர் குடிக்கபடுகிறது
வேண்டாம் புகை பழக்கம் மது பழக்கம்

இப்படிக்கு
இன்று, நாளை, அல்லது மற்றொரு நாளில் மரணிக்க காத்திருக்கும் ஏற்கனவே இறந்து விட்டவன்.

Thursday, September 23, 2010

நேற்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும்
"கடவுள் தன்னை வணங்குபவர்களுக்கு பயந்து கொண்டு நாத்திகர்கள் வீட்டு கதவை தட்டி கொண்டிருக்கிறார்"

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு

Thursday, August 5, 2010

கடவுளை மறுப்பவன்

கடவுளை மறுப்பவன் அலைபேசியில் கடவுள் என்றொரு பெயரில் எண் பதியபட்டிருந்தது யாரென கேட்டேன்
முன்னாளில் காதலி இந்நாளில் மனைவி என்றொரு பதில் கிடைத்து

Saturday, April 10, 2010

Monday, March 29, 2010

அங்காடித்தெரு


அங்காடித்தெரு





வசந்த பலன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மற்றுமொரு குறிஞ்சியாய்

ஜெயமோகன் வசனத்தில் மற்றுமொரு யதார்த்த பாத்திர படைப்பு நிறைந்த
கவிதையாய்

புதுமுக அறிமுகத்தில் உண்மைகளை யாரும் சிந்திக்காத ,நினைத்தும் பார்க்காத மனிதர்களின் மறு பக்கத்தை வலியை சொல்லிய காரணத்திற்கு இயக்குனர் வசந்த பலனை நிச்சயம் பாராட்ட வேண்டும் ,
விவசாயம் பொய்த்து போன தென் மாவட்டங்களில் இருந்து பஞ்சம் பிழைக்க வரும் ஆண் பெண் இளைஞர்கள்,விற்பனை மனிதர்களாக அவர்களின் கதையை உண்மைக்கு வெகு அருகில் சென்று படம் பிடித்து ,
ulaippu சுரண்டல் பேர்வழிகளின் தோலுரித்து சமூக பொறுப்புள்ளசினிமாவை தரும் பாங்கு பாராட்டுதலுக்கு உரியது ,


தினம் தினம் மக்களால் நிரம்பி, பிதுங்கி வழியும் சென்னை மாநகர் கடை வீதிகளில் ,பிரம்மாண்டமாய் தென்படும் துணிக்கடைகள் ,அதில் வேலை பார்க்கும் மனிதர்கள் ,அவசரங்கள் ,சுரண்டல்கள் ,மனித உரிமை மீறல்கள் வேலை பார்க்கும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் ,அந்த உணவு கூடம் ,தூங்கும் பெரிய ஹால் ,களைப்பில் தூக்க வெறியில் குவியல் குவியலாய் தூங்கும் இளைஞர்கள் ,அவலங்களை ,சாடி ஒரு படம் (பாடம் ),வந்திருப்பது பார்க்கும் அனைவரையும் நிச்சயம் யோசிக்க வைக்கும் ,


கடை முதலாளிகள் ,இன்னம் பிற நிறுவன முதலாளிகள் மனசாட்ச்சியை பதறி உலுக்குவது நிச்சயம் ,

தொழிலாளர்கள் நலன் ,பாதுகாப்பு ,மனித உரிமைகள் ,

இவை யாவும் பேசப்படும் ,

இனியாவது நிறைய மாறுதல்களை கடை ,நிறுவனங்களில் வேலை பார்ப்போரிடமும் ,வேலை வாங்குவோரிடமும் ஏற்படுத்தும் .


சொல்லபடாத சங்கதிகள் ,அறியபடாத மனிதர்கள் ,அவர்கள் வாழ்வியல் ,அழகியல் ,அவலங்கள் ,ஆனந்தங்கள் என அனைத்தையும் படம் பிடித்த சமூக கருத்துகளை ,அவலங்களை தலையில் கொட்டி புரிய வைக்க வந்திருக்கும் இந்த படம் நிச்சயம் கொண்டாட பட வேண்டிய படம்

Wednesday, February 24, 2010

மீண்டும் பறக்கவே ஆசை எமக்கு

தோல்விகள் புதிதல்ல நமக்கும் நம்மை போன்றவர்க்கும்
மீண்டு வருவதும் ,எழுந்து நடப்பதும் ,உயித்தெழுவதும் ,அடிக்கடி நடக்கும் சாதரண நிகழ்வுகள்
போராட்டமே வாழ்க்கை ஆனபிறகு போராடுவதே ஆனந்தம் ,அந்தமும் கூட
போராட்டம், தோல்விகள், ஏமாற்றங்கள் இல்லாமல் நாங்களில்லை .....நாட்களும் நகருவதாயில்லை
விழுவோம் எழுவோம் பறப்போம் இளைப்பருவோம் ..........மீண்டும் தொடரும் முடிவதில்லை
தொடரவே விருப்பம் எங்களுக்கு ...............................

Tuesday, February 9, 2010

தமிழ் சினிமா கடந்த பத்தாண்டுகளில் -ஒரு மீள் பார்வை

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமா நிறையா மாறுதல்களை சந்தித்து உள்ளது ,கிட்டத்தட்ட வருடத்தில் ஐம்பது படங்கள் என்றால் கூட அறுநூறு படங்கள் வெளிவந்துள்ள நிலையில் எந்த படங்கள் வெற்றிகரமாக ஓடியது ? எந்த படங்கள் திட்டரை விட்டு ஓடியது ?ஏன் ஓடியது ?என்பதற்கான வினான்க்களும் அதற்கான விடைகளுமாக சாதாரண ரசிகன் என்கிற முறையில் எழுதப்படும் எழுத்து இந்த வலைபதிவு .காரணங்களை பாரபட்சம் பார்க்காமல் கத்தி முனையில் நின்று விமர்சனங்களை எதிர்கொள்ள ,எழுத கடமைபட்டுள்ள காரணத்தால் இதனை எழுதுகிறேன்.ஏம்ப்ப இந்த வேண்டாத வேலை உனக்கு என்றால் .நண்பர்கள் இதற்கு முந்தைய வலைபதிவுகளுக்கு கொடுத்த ஆதரவும் ,ஆலோசனைகளும் ,வாழ்த்துகளும்

Monday, February 1, 2010

தமிழ் படம் -இந்த படத்த பாத்துட்டவது திருந்துவானுன்களா ??






அன்னைக்கி பவர் கட்டு நம்ம ஊர்ல ,
சரின்னு திட்டேர் பக்கம் போன முதல் முதல் காட்சியை நியாயமான விலை கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்தேன் .

தமிழ் படம்

இந்த படத்த பாத்துட்டவது திருந்துவானுன்களா ??

அரைச்ச மாவை அரைப்பதும்

கரைச்ச புளியை கரைப்பதும்

தொடரும் இன்றைய தமிழ் சினிமா சூழலில்

ஹீரோயசத்தை ,காதல் காட்சிகள் ,பஞ்சு டைலாக்கை ,
வழக்கமான ரசிகன் யூகிக்க கூடிய கதை அம்சத்தை ,
குத்துபாட்டு ,நம்ப முடியாத சண்டை காட்சிகள்
அதுவும் ரஜினி ,கமல் ,விஜய், தல ,வால்,
என்று யாரையும் விட்டு வைக்காமல் கிழி கிழி என்று கிழித்திருப்பது படத்தின் பலம் ,

தளபதி வரிசை நாயகர்கள் இனிமேல் பன்ச் டைலாக் பேச இனி பயப்படுவாணுக ஏன்ன அந்த அளவுக்கு பன்ச் டைலாக் இந்த படத்தில் பஞ்சராக்க பட்டிருக்கிறது .



உண்மையில் வித்தியாசமான படம் ,

ஹீரோ இன்ட்ரோ காட்சியில் பான்ட் கிழிந்து ஜட்டி தெரிய நிற்கும் காட்சி ,

ஆண் பிள்ளைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் காட்சி ,

வில்லி ஆண் இளைஞனை கற்பழிக்க முயலும் காட்சி ,

முதன் முறையாக ஹீரோஇனி சண்டையை பார்த்து காதல் கொள்ளும் ஹீரோ ,

ஒரு ஆங்கில குடும்ப பாடல் கேட்டு குடும்பம் ஒன்றாக சேரும் காட்சி ,

என்று நிறைய மாற்று காட்சிகள் கைதட்டல்கள் ,சிரிப்பு சப்தங்களால் ,

திரை அரங்கம் நிரம்பி வழிகிறது ,



குறிப்பிட்ட ரசிகன் என்றில்லாமல் அனைவராலும் இந்த படம் ரசிக்க வைக்கிறது ,

முன்னணி
ஹீரோக்கள் ,இயக்குனர்கள் ,பாடல் ஆசிரியர்கள் ,என அனைவரையும் மரியாதையாக திட்டியிருப்பது தெளிவாக புரியும் .

திருந்துகய்ய
,ஒட்டுமொத்த இயக்குனர்களும் ,முன்னணி ஹீரோக்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்,,,


அதுவும் ஒரே பாடலில் காபி வருவதற்கும் ஹீரோ கஷ்டப்பட்டு ,கோடீஸ்வரன் ஆகும் காட்சி நல்ல செருப்படி ,இனிமேல் ஒரே பாடலில் உழைத்து முன்னேறுவது போல காட்ட யோசிப்பார்கள் கண்டிப்பாக .

விளங்காத வார்த்தைகள் கொண்ட அந்த தமிழ் பாடல் ஓமக சீய ,, தியட்டரில் கைதட்டல், அடிக்கடி கேட்ட பாடல் இதுவாக இருக்கும் ,ஹீரோ நல்ல நடிப்பு ,நகைச்சுவை ,நன்றாக செய்திருக்கிறார் .நல்ல தேர்வு ,அனைவரும் தங்கள் பங்களிப்பை நன்றாக செய்திருக்கிறார்கள் ,பறவை முனியம்மா தூள் படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒளிர்கிறார் .

இயக்குனர் அமுதன் ,தயாரிப்பாளர் அழகிரி தைரியமாக இப்படி ஒரு சவுக்கடி தமிழ் படங்களின் மீது வீசியிருப்பது உண்மையில் பாராட்டுக்கு உரியது .
.இரண்டாம் பாதியை ஜவ்வாய் இழுத்திருக்க வேண்டாம் ,சிறுவர்கள் ரசிப்பார்கள் ,

மொத்தத்தில் இந்த படத்தின் வெற்றி சிரிபொலி ,கைதட்டல்கள் ,நிரம்பி வழியும் இளைஞர் கூட்டம் ,இவை தான்

Friday, January 22, 2010

எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா அன்றும் இன்றும்

எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா அன்றும் இன்றும்

நீலகிரி மாவட்டத்தில் பொதுவாக ஏப்ரல் ,மே ,மாதங்களில்அனைத்து ஊர்களிலும் வசந்தகால திருவிழா என்று அனைவரும் கொண்டாடுவார்கள் .

சுமார் ஏழுநாட்கள் நடக்கும் இந்த திருவிழா ,ஊருக்கு பந்த கால் நடுவதில் இருந்து தொடங்கும் .அது முதல் யாரும் ஊரை விட்டு வெளியூருக்கு செல்ல கூடாது ,பண்டிகை முடிந்த பின்னர்தான் ஊருக்கு உறவினர் செல்ல வேண்டும் .


தேயிலை தோட்டங்களில் முதலில் எல்லைசாமி ,மலைச்சாமி ,மழைசாமிஎன்ற இந்த மூன்று சாமிகள் இயற்கை தெய்வங்கள் இவைகளுக்கு முதலில் படையல் ,பூசை ,என்று ஏழு நாட்கள் முன்பாகவே திருவிழா தொடங்கும் .பச்சஅரிசி மாவு ,கேழ்வரகு கூழ். அச்சுவெல்லம் ,புளியன்சாறு ,தேன்பலா,ஆரஞ்சு ,பெரிப்பழம்இவையெல்லாம் படைத்து திருவிழாவை ஆரம்பித்து வைப்பார்கள் .

நான்கு எல்லைகளிலும் பூசை நடக்கும் ,நான்கு மூலைகளிலும் படையல் ,வைத்து ஊரே அமர்க்களபடும் .........
ஊருக்கு நடுவில் இருக்கும் அம்மன் கோவில் பந்தல் போடுவார்கள் ,கோபுரங்கள் வண்ணம் பூசப்பட்டு ,சிற்ப்பங்கள் எண்ணெய்குளியல் எடுக்கும் ,பளிச்சென்று இருக்கும் ,முனீஸ்வரர் ,விநாயகர் சிலைகள் பளிச்சென்று இருக்கும் .அலங்கார வளைவுகள் ,வண்ண காகித தோரணங்கள் ,வெள்ளை காவி ,வண்ணங்கள் ஊரையே மொத்தத்தில் திருவிழா மயமாக காட்டிவிடும் .

பூசாரி அன்றிலிருந்து கோவிலில் தங்கி விடுவார் .அவரோடு துணை பூசாரி இரண்டு பொடியன்கள் ,அவர்கள் நண்பர்கள் என ஒரு பட்டாளமே கோவிலை ஒட்டி பழியஆய் கிடப்பார்கள் .பக்கத்து ஊரில் இருந்து சிறுவர்கள் சிறுமிகள் வந்து பார்த்து விட்டு போவார்கள் ,அவர்கள் ஊரிலும் திருவிழா வரும் ,அப்போது எங்க ஊர் சிறுவர்கள் அங்கு போவார்கள் .

நள்ளிரவு பூசை ,மாவிளக்கு பூசை ,மஞ்சள் நீர் , இப்படி மூன்று நாட்கள் நடக்கும் முக்கியமான திருவிழா .கரகாட்டம் .நாதஸ்வரம் ,மேளதாளம் ,தாரை ,தப்பட்டை ,
கோமாளிமேடை நாடகம் ,ஒரு சினிமா இப்படியாக எங்கள் ஊர் திருவிழா நடந்து முடியும் அழகே தனி ,


பதினைந்து வருடங்களுக்கு முன்பு கொண்டாடிய திருவிழா
இப்போது கொண்டாடும் திருவிழா ,நிறைய மாற்றங்கள் ,அதே கோவில் ,அதே பூசாரி ,அதே மக்கள் ஆனால் பழைய குதூகலம் ,மகிழ்ச்சி ,சிறப்புகள் ஏதும் இல்லாமல் விரைவாய் முடிந்துவிடுவது போல இருக்கிறது ,தொலைகாட்சிகள் மனிதர்களை பிரித்து வெகு தொலைவில் வைத்துள்ளது .சிறுவர்கள் நள்ளிரவு பூசைக்கு அதிகமாக வருவதில்லை .

பழைய திருவிழா ,அதை ஒட்டிய கொண்டாட்டம் ,குடி போதை ,சீட்டாட்டம் ,மைக் செட்டு அலப்பறை ,மேடை நாடகம் ,சிறுவர்களின் நடனம் ,விளையாட்டு போட்டி ,பானை உடைத்தல் ,ஓட்டபந்தயம் ,சாப்பாட்டு போட்டி இப்படி போட்டிகள்
இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ஏழு நாள் திருவிழா மூணு நாள் திருவிழாவாகி போனது ................

தொடரும்

Wednesday, January 20, 2010

மழை துளியின் ருசி

அகல விழி திறந்து
நீண்ட நாக்கு நீட்டி
முழுவதும் செவி திறந்து
வீழும் மழைத்துளியை
அண்ணாந்து கண்டு ,உண்டு ,கேட்டு ,....
மழையில் நனைதல் மூலம் மட்டுமே சாத்தியபடுகிறது ....

Monday, January 11, 2010

என் ஞாயிறுகள்

என் ஞாயிறுகள்
சனி ஞாயிறு விடுமுறைஎன்பதால் வெள்ளிகிழமை மாலை வீட்டிற்கு குதூகலத்துடன் பள்ளியை விட்டோடும் மாணவனை போல்

சனிக்கிழமை பொன் மாலை பொழுதின் நிமிடங்களில்
ஆரம்பிக்கிறது வீட்டிற்கு செல்வதான பயணம்..............


வளைந்து நெளிந்த கொண்டை ஊசி வளைவுகளின்
ஊடே எறும்பின் வேகத்தில்
மலையேற்ற அரசு பேருந்து பயணத்தில்
நள்ளிரவின் இருளை பிரித்து பயணம்
பேருந்து வானொலியில் பழையா பாடல்களை கேட்டவாறு மனம் மட்டும் பின்னோக்கி பயணிக்கிறது ..................

எப்படியேனும் கிடைத்து விடுகிறது
எனக்கு மட்டும் எளிதில் பேருந்து ஜன்னலோரம் ,,,,,,,,

ஜன்னல் திறந்தால் நடுங்கும் குளிரிலில் நீள்கிறது பயணம்
ஊர் வந்து நிறுத்தம் தாண்டியும் ஓடும் பேருந்தில்
இருந்து குதித்து இறங்கி ஓடி பின் நின்று
ஏற்றத்தில் மூச்சிரைக்க ஏறி கதவை தட்டி

முதிர்ந்த என் பெற்றோரால் கதவு
திறக்கும் பொழுது ஞாயிறு விடிந்து விடுகிறது ............

எனக்கான தேநீரும் ,இரவு உணவும் காத்திருக்கும் அடுப்படியில் ..............

Friday, January 8, 2010

என்னையே எழுதி விடுவது என்பது தீர்மானித்தேன் ....

என்ன எழுதுவது ??
என்று நீண்ட நாள் யோசித்த பிறகு
என்னையே எழுதி விடுவது என்பது தீர்மானித்தேன் ....
என் அனுபவங்கள் ,கடந்து வந்த பாதைகள் ,மனிதர்கள் ,சம்பவங்கள் , இப்படி நிறைய எனது பால்ய பருவங்கள் முழுக்க முழுக்க அனுபவங்களால் முற்றி நிரம்பி வழிகிறது ,,,,,,

சிறு வயது முழுக்க,இயற்கையான காற்று , மழை பிரதேசம் ,அடர்ந்த காடுகள் ,தேயிலை தோட்டம் ,பலா,மா ,நாவல்பழ ,பேரி ,
,ஆரஞ்சு தோட்டம் ,தேன் கூடு, என முழுக்க முழுக்க இயற்கை மதியி தவழ்ந்து வளர்ந்த நாட்கள் ...........புத்தகம் படிப்பது கூட உயர்ந்த பாறை அல்லது மரக்கிளை
இப்போது லேப்டாப்பில் நினைத்தால் சிரிப்பு வருகிறது ,சில நேரம் அழுகையும் வருகிறது ,மரமேறி சில வருடங்களா இருக்கும் , தலையில் சுமை சுமந்து பல நாட்கள் ஆகிறது ,,,,,,நெடுதூரம் க்காட்டு வழி நடந்து வெகு நாட்கள் ஆகிறது .......

கல்லூரி படிக்க வேண்டி காங்குரீட் நகர கட்டிட நகருக்குள் சிறை பட்ட நாட்கள் ,காற்று முதல் நீர் வரை எல்லாமே அழுக்கு, அமிலம் கலந்துதான் .
வேகமான நாகரீகம் அவசர துரித உணவு ,எல்லாம் பாக்கெட் அடைத்த மனிதனாய் உணர்ந்த நாட்கள் அவை ......


படித்து முடித்து வேலை தேடி அலைந்து ,சென்னை இன்னொரு நரகம் பேரிரைச்சல் ,முன்னம் பாதி பின்னம் பாதி வேகமாக அசுர கதியில் இயங்கும் இயந்திர மனிதர் கூட்டம் ,இயல்பை தொலைத்து இயந்திரமயமான வாழ்க்கை பிடிக்காமல் மீண்டும் கோயம்புத்தூர் வந்து செட்டில் ஆகி

வியாபார துறை அதுவும் விற்பனை பிரிவில் ,சாதாரண மனிதர்கள் முதல் சாமானியர்கள் வரை சந்தித்த அனுபவங்கள் மிகவும் விசித்திரமானது
நிறைய மனிதர்கள் சந்திப்பு ,சண்டைகள் ,சமாதானங்கள் ,சமரசங்கள் ,
என நீளும் இந்த வரிசையில் எழுதுவேன் என்னை ...................

அரசு துவக்க பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் அண்ணா பல்கலைகழக கணிப்பொறியியல் வரை

ஜாரே தமீன் பார் மற்றும் த்ரீ இடியட்ஸ்

இரண்டு படங்களை பார்த்தல்


நமது கல்வி முறையின்
குறைபாடுகளை சுட்டி காட்டும் படங்களாக வந்திருப்பது ,அப்பட்டமாக தெரியும் ஆறுதலான விஷயம் .வாழ்த்துகள்


ஆனால் நமது கல்வித்துறை புலிகள் அதெல்லாம் டூப்பு நாம தான் டாப்பு
என்று ஆங்கிலேயன் நமது நாட்டை விட்டு போன போது விட்டு சென்ற பழைய்ய்ய மெக்கல்ல கல்வி முறையை தொங்கி அதனால் மாணவர்களின் தலை வீங்கி கொண்டிருப்பது காலத்தின் கொடுமை ,,



மோசமான அடிமை கல்விமுறை
நிரம்ப நினைவு திறன் வளர்ப்பதாக மட்டுமே உள்ளதை யாராலும் மறுக்க முடியாது (படிக்க மறக்க மீண்டும் படிக்க மறக்க )

அரசு துவக்க பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் அண்ணா பல்கலைகழக பொறியியல் கணிப்பொறியியல் வரைக்கும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இந்த மனனம் செய்தல்
போட்டியில் தொடர்ந்தது முதல் மதிப்பெண் ,முதலிடம் வாங்க போராட்டம் ,,,,,,,,,,,


தாளில் எழுதுதல் பின்னர் மறந்து போக செய்தல் மீண்டும் மனனம் செய்தல்
அடுத்த தேர்வு ,அடுத்த பாடம் ,அடுத்த வகுப்பு ,


இப்போது உங்களில் நிறைய பேருக்கு தொடர்ந்தது
ஒரு பத்து திருக்குறள் சொல்ல இயலுமா ??


,பள்ளியில் படித்த ஆங்கில பாடல் வரிகளை பாட இயலுமா ??

,ஒம் விதி??
,நியூட்டனின் விதிகள் ?
OSI SEVEN LAYERS ???



சத்தியமாக தெரியாது .

படித்தல் பின்னர் மறக்கவும் ,மீண்டும் படிக்கவும் தயாராகுதல் என்பது தான் போதிக்க பட்டது ,கட்டயபடுத்தபட்டது , வகுப்பில் முதல் மாணவனாக வர இந்த தகுதிகள் போதுமானவையாக இருந்தது .

கல்லூரியில் நீண்ட ப்ரோக்ராம் வரிசைகளை,கணிதத்தின் வரிகளை ,ஏன் விடைகளை கூட மனனம் செய்யும் புலிகளை நண்பர்களாக கண்ட போது அதிர்ந்தே போனேன் .

கல்வி கூடத்தின் பதினேழு ஆண்டுகளில் உண்மையை சொல்வதானால் நல்ல முறையில் சுயமாக ஒரு கண்டுபிப்பும் செய்ய வில்லை ,படிக்கவும் இல்லை ,

மாநில ,மாவட்ட அளவில் கவிதை ,கட்டுரை என பரிசு பெற்றதே சாதனை என சொல்ல வேண்டும்,

தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும் ,என்று மட்டுமே நிர்பந்திக்க பட்டேன் ,

கற்பனைகளை கட்டுரைகள் ,சிறுகதைகள் ,கவியரங்கம் , திரையரங்கம் ,நாடக மேடைகள் என நிறைய செலவிட்டேன் , அதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய்ய்ய எதிர்ப்பை திணித்தார்கள் ......

கவிதை எழுத தமிழ் மொழியை கொஞ்சம் வசபடுத்தி கொண்டேன் ,உலக இலக்கியம் ,கவிதைகள் ,எழுத்தாளர்கள் என என்னை நானே நிரப்பியதன் விளைவே இந்த வலைப்பூ ....பதிவுகள்

பதினேழு ஆண்டுகளை கல்வி கூடங்களில் நான்கு சுவர்களுக்குள்
வீண் செய்து விட்டோமே!! என்ற குற்ற உணர்ச்சியும் எனக்கு உண்டு .

பின்னர் முதல் வகுப்பில் பட்டம் பெற்று ,நண்பர்கள் ஆரம்பித்த நிறுவனத்தில் வேலை பார்த்து .....
அங்கிருந்து கிளம்பி அதை போலவே சுயமாக ஒரு நிறுவனம் அமைத்து இப்படியாக ஒரு ஐந்து ஆண்டுகள்,,,,,,,,,,

நிம்மதியாக ,சுயமாக ,சுதந்திரமாக ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு

சில மாதங்கள் மட்டுமே படித்த வலைதள வடிவமைப்பு மென்பொருள் பயிற்சி மட்டுமே உதவியது ,உதவப்போகிறது .....என்பது தான் உண்மை .


இப்போது வார இறுதிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க சில கல்லூரிகளுக்கு செல்வதுண்டு இன்னமும் அதே மனனம் செய்யும் எந்திரங்களை காணும் போது மனம் வலிக்கிறது ............

ஏதோ சமச்சீர் கல்வி அது இதுன்னு சொல்லி கொள்கிறார்கள் .வந்தால் பரவாயில்லை பார்க்கலாம் .வரவிட மாட்டார்கள் போல . கல்வி கொள்ளையர்கள் பல பேர் இந்த நாட்டில் .


மாணவர்களை
புதியனவற்றை ,கண்டுபிக்கவும்,
சுயமாக படைப்பு திறனை ஏற்படுத்தவும்
தவறுகின்ற கல்வி முறையில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை ,

வீட்டில் இருந்ததே படித்து பட்டம் பெறுவது ,
கல்லூரி சென்று படித்து பட்டம் பெறுவது இரண்டும் ஒன்றா ??????????

நன்றாக இல்லை .கல்வி கட்டணத்தை,, நேரத்தை வேண்டுமானால் மிச்சம் செய்யலாம் ,,,,,அனுபவங்களை உங்களால் பெறவே முடியாது .
மேற்கத்திய அறிஞர்கள் ,விஞ்ஞானிகள் ,மேலாண்மை ,பொறியியல் ,மருத்துவம் ,என


யாரோ எழுதியவற்றை
நாமே எத்தனை நாள் தான் படித்து கொண்டிருப்பது .
மனனம் செய்து தேர்வுத்தாளில் மதிப்பெண் வேண்டி எழுதி தள்ளுவது .

புதிதாக எப்போது நீ எழுதுவது ......

..அதை எப்போது யார்??
படிப்பது என்பதல்லவா கேள்வி ????


அரசு ,கல்வி நிறுவனங்களின் மூலம் பணம் பார்க்க தொலை தூர கல்வி முறையை அமைத்து அவர்களை படிக்க வைத்து எழுத வைத்து பின்னர் மதிப்பெண் போட்டு பட்டம் தந்து வேலையை தராத இந்த கல்வி முறை எப்போது மாறும் ....

அறிவியல் ,பொறியியல் கண்டு பிடிப்புகள் இந்தியாவிலும் வருவதற்கு வாய்ப்பளிக்கும் கல்விதிட்டம்தான் தேவை


மேற்கண்ட எழுத்துகள் யாவும் எனது சொந்த அனுபவங்கள்
உங்களுக்கானது அல்ல .......


அனுபவங்களும் பகிவுகளும் தொடரும் ...............

Monday, January 4, 2010

காதலுக்கும் உண்டு கண்கள் நான்கு

மறக்கவும் மறுக்கவும் முடியாத நிகழ்வுகள் உண்டெனில் அது முதன் முதலாய் காதல் வந்த நாளைய்தான் இருக்க முடியும் ,

நன்றாக தெரியும் நமக்கு இது அதிகமென்று ,மிகையானதென்று ,படிக்கும் போது இதெல்லாம் ................

கண்களுக்கு ,இதயத்திற்கு எல்லாம் அழகைத்தான் ஆராதிக்க தெரியும் .
இனக்கவர்ச்சி அந்த வயதில் அதனை ,அதன் விளைபொருளை தந்தே தீரும் .

அதனால் யாரும் காதல் வயப்பட வில்லை என பொய் சொல்ல முடியாது


அதன் பின்னணியில் பின்ன பட்டிருக்கும் பொருளாதார ,சமூக வலைகள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை .

ஆனால் இந்த காலத்து காதல் ,காதலர்கள் ,

சொத்து ,சம்பாதனை , வேலை ,ஆடம்பரமான வாழ்க்கை ,பிள்ளைகளின் எதிர்காலம் !!!!!!!!!!!!!! குறித்த தெளிவான முடிவுகளுடன் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள் ,முடிவும் எடுக்கிறார்கள்

இது நல்ல ஆரோக்கியமான விசயம்தான் ,

எனக்கு தெரிந்த நண்பர்கள் காதலி ,காதலன் ,யாராகிலும் எதிர்கால பொருளாதார நிலைபாடுகளை கருத்தில் கொண்டு காதலித்து பின்னர் திருமணம் செய்வது எல்லோருக்கும் நல்லது ,

காதலித்து நன்றாக வாழ்ந்தவர்களையும் ,கெட்டு சீரழிந்தவர்களையும் ஒன்றாகவே பார்த்தவன் நான் .

பள்ளி நாள் முதல் கொண்டே சிலரது காதலுக்கு என் கவிதை நிரம்பிய காதல் கடிதங்கள் பயன்பட்டுள்ளன .

சிலரது காதலுக்கு என் அழகிய கையெழுத்து நிரம்பிய கடிதங்கள் பயன் பட்டுள்ளது .

இதற்கு கட்டணமாக டீயோ ,சிற்றுண்டியோ ,பணமோ ,அன்பளிப்போ அவப்போது பெறுவதுண்டு .

இங்கு காதல் கடிதங்கள் எழுதி தரப்படும் என்று போர்டு ஒன்று மட்டும் தான் வைக்கவில்லை ,,,

,பள்ளியில் இருந்து கல்லூரி வரை இதை ஒரு சமூக சேவையாக செய்து வருகிறேன் ,


அப்படி ஒரு நண்பன் பெயர் காளி ,படிக்க வில்லை ,டிரைவராக எங்கள் டி ஈஸ்டட்டில் வேலை அவனுக்கு,அவன் காதலி படித்தவள் படித்து கொண்டிருப்பவள் .....பக்கத்து ஊரில்

அவனுக்கு அடிக்கடி காதல் கடிதம் எழுதுவது, பதில் கடிதம் படித்து காண்பிப்பது நான்தான்.....


ஒருநாள் சுமார் ஏழு மணியிருக்கும் நிலவொளியில் நெடுஞ் சாலையோரம் ,தடுப்பு சுவற்றில் அமர்ந்தபடி ,

பெரிய காகிதத்தில் கவிதை கலந்த ,வார்த்தைகளால் குறைவான வெளிச்சத்தில், பென்சிலால் குத்து மதிப்பாக மீண்டும் படித்து பார்க்க இயலாத , எழுதிய காதல் கடிதமே நான் எழுதிய கடிதங்களில் மிக சிறந்தனவாக இருக்கிறது இன்று வரையில் .

பொக்கிஷம் சேரன் கூட இப்படி எழுதியிக்க வாய்ப்பில்லை ,

நான் எனக்கு கூட அப்படி எழுதி கொள்ளவில்லை .(அந்த சூழ்நிலை எனக்கு வாய்க்கவில்லை என்பது வேறு விஷயம் )

அந்த காதல் என்ன ஆனது தெரியுமா ???

அந்த பெண்ணின் வீட்டிற்கு காதல் விவகாரம் தெரிந்து பிரச்சனையாகி உடனடியாக பெண்ணிற்கு வேறிடத்தில் திருமணமாகி குழந்தையும் பிறந்து.

காளி காதல் தோல்வியால் பழைய சோகப்பாடல்கள் ,நடுத்தர மோகன் காதல் சோக கீதங்கள் என ஊருக்கே ஸ்பீக்கர் வைத்து அலறவிட்டது ..................வரலாற்றில் இன்னமும் அளிக்க முடியாதது ,

ஒரு வருடம் ஆனது

அதன் பிறகு தன் கணவனால் தனது பழைய காதல் கண்டறியப்பட்டு ,காதல் கடிதங்கள் படிக்கப்பட்டு (அத்தனையும் நான் எழுதியவைகள் ) தாய் வீட்டிற்கு அனுப்பபட்டாள் .....

காளி என் நண்பன் என்ன செய்தான் தெரியுமா?

தன் வீட்டை ,உறவினர்களை எல்லாம் எதிர்த்து தான் காதலித்த
அந்த பெண்ணை ,தன் காதலியை அந்த கைகுழந்தையோடு ஏற்று கொண்டான் .

முதன் முதலாக அந்த சமூக புரட்சியை யாரும் எதிர்பார்க்க வில்லை

நான் எழுதிய காதல் கடிதங்கள் இன்றைக்கும் அந்த தம்பதியினரால் நன்றோயோடு நினைவு கூறப்படுகிறது ,

அதன் பிறகு அவர்களுக்கும் ஒரு குழந்தை பிறந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகிறார்கள் .


வாழ்க காதல் ,வளர்க காதலர்கள் ,எழுதப்படட்டும் காதல் கடிதங்கள் ............மின்னஞ்சல் ,குறுஞ்செய்தி , வடிவம் மாறலாம் ........காதலின் படிவம் ஒன்று தான்

காதலுக்கும் உண்டு கண்கள் நான்கு

Wednesday, December 30, 2009

HAPPY NEW YEAR-2010

பேசாத புகைப்படங்கள்என்னோடு பேசுவதாக உணர்கிறேன்

பெருபாலும் புகைப்படங்கள்
என்னை நிறைய சிந்திக்க , எழுத வைக்கின்றன ............
அவை என்னை கவிதை எழுத தூண்டுகிறது
அதன் வண்ணங்கள் என் எண்ணங்களை கிளப்பி விடுகின்றன .......

அவற்றிக்கு என்னாலான ஏதாவதொன்றை எழுதியே ஆக வேண்டும் என்கிற தீர்மானம் அவப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது ......

ஆகவே அடிக்கடி புகைப்படங்களை
பார்த்து கொண்டே என் ஓய்வு நேரங்களை கழிக்கிறேன் ,,,,,,,,,,,,,,,,


தனிமையில் அந்த பேசாத புகைப்படங்கள்
என் மௌனத்தை கலைப்பதாக உணர்கிறேன் .........
என்னோடு பேசுவதாக உணர்கிறேன் ...................................

w3webmedia's second birthday 01-01-2010

வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை முடித்து முத்தான மூன்றாவது ஆண்டில் w3webmedia பயணிக்கிறது ,75 வாடிக்கையாளர்கள் ,25 மாணவர்கள் பயிற்சி ,
50 இளைங்கர்களுக்கும் மேலாக பணிவாய்ப்பு மற்றும் உதவிகள் ,வழிகாட்டி நிகழ்ச்சிகள் ,மொத்தத்தில் கடந்த ஆண்டு மிக சிறந்த ஆண்டு , நிறைய சவால்கள் ,ஏமாற்றங்கள் ,சாதனைகள் ,தனிப்பட்ட வெற்றிகள் ,குடும்பத்தில் நடந்தத நல்ல சுப காரியங்கள் ,நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் ,நீக்கல்கள் ,

புதிய நண்பர்களின் வருகைகள் ,எனது புதிய முயற்சிகளின் வரவேற்புகள் ,என்ன மொத்தத்தில் இந்த 2009 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்த்தது .

வரவேற்கிறேன் 2010 ஆம் ஆண்டை இன்னமும் நிறைய வெற்றிகளை ,மகிழ்ச்சிகளை ,புதிய அனுபவங்களை அள்ளித்தர வேண்டி
2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Monday, December 28, 2009

பள்ளியில் நான் நடித்த நாடகங்களை

பள்ளியில் நான் நடித்த நாடகங்களை மீண்டும் எனக்குள்ளாக அசைபோட வைத்தது அந்த நிகழ்வு ...

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் தொண்டு நிறுவனம் ஒன்று என்னை நடுவராக அழைத்திருந்தது ,
அன்று குழந்தைகள் தினவிழா .
நான்,கவிஞர் சூரிய நிலா ,சென்னை வருவாய் இணை ஆணையர் நந்தகுமார் IRS ,மற்றும் அலுவலர்கள் என நிறைய பேர் அந்த இரண்டுநாள் கலைவிழாவில் கலந்து கொண்டோம் ,

பிள்ளைகள் நடனம் ,பாட்டு,திருக்குறள் ஒப்புவித்தல் ,தனி நடனம் ,குழு நடனம் ,என மொத்தத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களும் குழந்தைகளாக மாறித்தான் போனோம் .

மனதில் அனைத்து கவலைகள் ,வேலை ,நாங்கள் யார் ? ,எங்கள் வயது ,என மொத்தமாய் மறந்து கவலைகள் ஏதுமின்றி அவர்களோடு உண்டு ,விளையாடி ,இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரை நன்றியோடு நினைவு கூர்கிறேன் .


குழந்தைகள் உலகம் மிகவும் விசித்திரமானது கவலை ,கடமை ,சூது ,வன்முறை ,பொறாமை , இவைகளுக்கெல்லாம் அர்த்தம் விளங்காத வயது .

நான் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது திருப்பூர் கொடிகாத்த குமாரனாக ,நடித்தேன்.

காங்கிரஸ் குல்லா வேண்டும் என நான் அலைந்து திரிந்தது கடைசியில் ,பள்ளி சீருடை ஒன்றை வெட்டி தைத்து குல்லை ரெடி ஆனது .

திருப்பூர் குமரன் நாடகம் -நான் கொடி பிடித்து கோசம் போட்டு ,தொண்டர்களை வழிநடத்தி செல்லும் போது ஆங்கிலேய காவல்துறை அதிகாரி ஒருவருடன் நீண்ட விவாதம் முடிவில் எனக்கு தலையில் தடியடி.

கொடியை பிடித்தபடி கீழே விழவேண்டும் வெள்ளை சட்டை வெள்ளை வெட்டி ,வெள்ளை குல்லாய் ,மண்ணில் விழுந்தேன் .தேசிய கொடி விழாமல் ,கர கோசம் பட்டையை கிளப்பியது ,சுற்றிலும் தேயிலை தோட்டத்து தாய்மார்கள் ,தந்தைமார்கள் ,சிறுவர்கள் ,

1992 ஆகஸ்ட் மதம் 26 ம நாள் பள்ளியில் நடந்ததது .

அன்று புகைப்படம் எடுத்து வைத்து கொள்ள இயலவில்லை , அடுத்து பாரதியார் ,கட்டபொம்மன் ,மருது சகோதரர்கள் ,வீர சிவாஜி ,என பக்கம் பக்கமாக வசனம் பேசி கைதட்டல்கள் ,எல்லார்க்கும் என் முகம் ,என் பெயர் பிரபலம் ஆனது ,


கடையியாக நான் மேடையில் நடித்தது என்றால் கல்லூரியில் இன்றைய கல்வி திட்ட குறைபாடுகளை ,மனனம் செய்கின்ற யந்திரகளை மட்டுமே உருவாக்கும் கல்வி திட்டம் குறித்த் நாடகம் ,தந்தை வேடம் எனக்கு ,முடித்து விரைவாக கவியரங்கம் ஓடியதாக ஞாபகம் ....

அதன் பிறகு ஒரு குறும்படம் நடித்தேன் temting tragedy நண்பர்கள் வட்டம் அப்போது அதிகம் எப்போதுமே .நிறைய நாடகம் நடித்ததால் நடிக்கும் கலை கைவந்த கலையாகி போனது .

இன்னமும் நடிக்க ஆசை மேடையோ ,திரையோ கிடைத்தால் ஒரு கை பார்க்க ஆசை ,வாழ்க்கை மேடையில் நித்தம் நித்தம் நடித்து ,ஒப்பனை ,உடை ,கலைத்து உறங்கும் பொத்து ஒவ்வொருவரும் நல்ல கைதேர்ந்த நடிகர்கள் என்பதை மறுக்க முடியுமா ??
ஆக

எல்லோரும் நடிகர்கள்
உலகமே நாடக மேடை --- சேக்ஸ்பியர்

Tuesday, December 22, 2009

ரேணிகுண்டா-டப்பா ஹீரோவா ஜானி ஹீரோவா ??





ரேணிகுண்டா புது பொடியன்கள், புது நாயகன் ,புது நாயகி , ,புது முகங்கள் ,புது டைரக்டர் ,புது மியூசிக் ,என முற்றிலும் புதுமையான,துணிச்சலான கூட்டணி படைத்திருக்கும் ஒளி ஓவியம் ரேணிகுண்டா

தியட்டரில் யதார்த்தமான ,உண்மையான ,ரசிகர் பட்டாளமில்லதா,
நிசப்தங்கள் ,கைதட்டல்கள் ,சிரிப்பலைகள் சந்தித்தது வெகு நாளைக்கு பிறகு இந்த படம் மூலமாகத்தான் .

நல்ல
கதைக்களம் யதார்த்தமான பாத்திர படைப்பு .முன்பகுதி முழுவதும் flashbak என கதை கையாண்ட விதம் அருமை

டப்பா ஹீரோவா ஜானி ஹீரோவா ??

சிறைக்குள் போலீசை மிரட்டும் போதும் ,அனைவரிடமும் நாமெல்லாம் அகிஸ்ட் என மிரட்டும் போதும் ,தன்னை விட நீளமான கட்டையை எடுத்து கொண்டு அடிக்க கிளம்பும் போதும்,போலீஸ் காரரை மிரட்டும் கைதியாக நடித்திருப்பது ,அடிக்கடி கோபபடுவது ,மப்பில் காமெடி பண்ணுவது , பஞ்சங்களை தீர்த்து வைத்துள்ளார் ,புது முகங்களை பார்த்து சில பழைய முகங்கள் மிரளும் கண்டிப்பாக ..................... டப்பா பிரேம் குமார் நல்ல நடிப்பிற்காக நிறைய கை தட்டல்கள் இவருக்குதான்

அடி ஏமண்டி...........பாட்டுக்கு டப்பா பிரேம் குமார் குடுக்கும் பீலிங்க்ஸ் லவ் பன்னதவனையும் லவ் பண்ண வைக்கும்

மழை பாட்டில் நாமும் கூடவே நனைவது போல ஒரு ஈரம் ......கேமரா மேன் மழையை
மழை
துளி வீழ்வதை
படம்
பிடித்திருக்கும் அழகு ,
கையாண்டுள்ள
வண்ண கலவை உலக தரத்திற்கு ஒரு பிடி மாதிரி

ஹீரோயின் காமம் கலக்காத பால்ய காலத்து நடிகை நல்ல தேர்வு .........ஊமையாமே என நம்மை அச்சச்சோ !!!!!!!!!!!!பாவப்பட வைக்கிறார் .........

ரேணிகுண்டாவில் நடக்கும் இருட்டு தொழில்கள்
போலீஸ் சிறைச்சாலை திரைமறைவு சமாச்சாரங்கள் ............
ஈரமில்லாத மறத்து போன காவல் அதிகாரிகள் ...............

கத்தி எடுத்தவர்கள் ஐந்து பெரும் ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுடப்பட்டு சாகும் காட்சிகள் நீதிக்கும் அநீதிக்குமான சாட்சிகள்

இந்த படம் நிச்சயம் வெற்றி படம்தான் நிறைய பேர் இரண்டு மூன்று முறை பார்த்தவர்கள் என தெரிந்து கொண்டேன்

அந்த குண்டு பய்யன் அடிவாங்கி சாகும் தருணங்கள் அனைவரையும் கவலை பட வைக்கிறது ,,,,,புது முகமா திறமை மிளிர்கிறது நால்வரிடமும்

எல்லோரையும் விட பிரேம்குமார் yeun டப்பா கேரக்டர் மனதில் நிற்கிறது
டப்பா சுடப்படும் போது பின்னணி இசை ஒரு குழந்தையை கொள்வதற்கான இசையோடு முடிவது டைரக்டர் டச் ..............

பேசலாமல் புது முகங்களை வைத்தே நல்ல கதையம்சம் உள்ள படங்களை எடுத்தல் என்ன ???

ஹீரோ கதையை சொல்ல சொல்லி படம் பிடித்திருப்பது புதுமையான
அருமை ....



இந்த படத்தில் அதிகாலை ,மழை ,லேசான வெய்யில் என வண்ணங்களை காட்சிக்கு பொருத்தமாக கலந்து புதுமையான ஒரு வண்ணகோலம் படைத்திருப்பது தொழில் நுட்ப கலைகர்களின் திரை வண்ணம் ..............

இறுதியில் ஹீரோவுக்கு என்று தனியாக வக்காலத்து வாங்காமல் கொஞ்சம் மரணத்தை நீட்டித்து முடிவில் அவரையும் கொன்று காதலியை காத்திருக்க வைத்து முற்று பெறாமல் படத்தை முற்று பெற வைத்திருக்கும் இயக்குனர் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்

மொத்தத்தில் நல்ல படம் ஒருமுறை தியேட்டர் போய் பாருங்கள் நண்பர்களே

நான் சொன்னதெல்லாம் உங்களுக்கே விளங்கும்

வேட்டைக்காரன்=மொக்கை கத்திக்காரன்






வேட்டைக்காரன் படத்திற்கு ரெண்டு டிக்கெட் கிடைச்சிருக்கு படம் இன்னைக்குத்தான் ரிலீசு வர்றியா ???
ன்னு ஒரு போன் கால் சரின்னு நம்பி.............. போனேன்


சன் டிவி, கே டிவி, சுட்டி டிவி ,சன் மியூசிக், வேற கால்ல்ல விழுந்து பிச்சை எடுக்காத குறையா ட்ரைலர் அடிக்கடி
எல்லா சேனல்லையும் போட்டு டார்ச்சர் பண்ணி

சன் பிச்சர்ஸ் வெளியிடும் படம் பாக்காட்டி ரேஷன் கார்டு
,அரிசி ,மண்ணெண்ணெய் , ஒன்னும் கிடையாதுன்னு அறிவிப்பு வந்தாலும் வரலாம் எச்சரிக்கை !!!!!!!!!!!!!!!!!!


நல்ல வேலை மண்டைல மூளைய பத்திரமா கழட்டி வச்சிட்டு போனேன்


படம் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரைக்கும் லாஜிக் + கதையில்லாமல் படம் பார்க்கும் ஒரே பரபரப்பு விறுவிறுப்பு


விஜய் இன்ட்ரோ சங்கு சாரி சாங்கு

நான் அடிச்ச தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட பாட்டுக்காக இவருக்கு போலீஸ் வேலை தரலாம்
விஜய் இன்ட்ரோ பைட்டு

இங்க ஊர்ல பழைய சுவர் ,கட்டிடம் உடைக்கனும்ன விஜய கூப்பிடலாம் காங்க்ரீட் கல்லுல ஒரு குத்துல உடைப்பார் பாருங்க ,எனக்கு ஒன்ஸ்மோர்
அதாங்க ஒன்ஸ் வந்திருச்சி


விஜய்
டயலாக்

இந்த படத்தில் பரவாயில்லை முன்பு குருவி படத்தில் செய்த தவறை திருத்தயுள்ளர்
விஜய் அல்லக்கை காமெடியன்ஸ் ஜால்ராஸ்

பாவம் திறமை இருந்தும் இந்த படத்தில் அவர்கள் பயன்படுத்தபடாமல் விட்டிருக்கிறார்கள்
ஹீரோயினி இண்ட்ரோ பிட்டு


ஹீரோயின் வயசாகி அக்க ரோல்ல நடிக்கும் முன்பாக படம் வெளியானதால் சில நண்பர்கள்
அருந்ததி anusgavirgaga படம் பார்க்க வந்திருப்பதாக சொன்னார்கள்

லவ்
சாங் நாலு

விஜய் அன்டோனி விஜய்க்காக மியூசிக் பண்ணியிருக்கிறார் பரவாயில்லை பாட்டு படத்தை காப்பாத்தும்

சண்டை மூணு

ஹீரோவின் மூன்று அடிவங்கல்களுக்கு பிறகு வழக்கம் போல இருபது முப்பது பேரை தனியாளாக நின்று அடித்து துவைப்பது பாவம்ப்பா stunt aartistgal


அவ்வளவே படம் அளவாக பண்ணி சாரி பின்னியிருக்கிறார்கள்

விஜய் பள்ளி பிளஸ் டு மாணவராக அறிமுகமாகி
கல்லூரி மாணவராக இதில் நடித்திருப்பது நகை சுவை காட்சிகள்( ஏய் சிரிங்கப்பா பின்னல் இருக்கையில் இருந்து நக்கல்ஸ் )

ஆட்டோ ஓட்டுகிறார் அடிதடி பண்ணுகிறார் வழக்கம் போல படிக்க வில்லை

அதன் அடிக்கிறார் இல்ல ................கல்லூரியில் காதல் வராமல் கல்லூரிக்கு வெளியே காதல் வருவது புதுமை

இத்தனைக்கு மேலாக இடைவேளை இடைவெளி இல்லாமல் ஆளாளுக்கு வசனம் பேசி ,பஞ்ச் டயலாக் பேசி கொன்னு குத்துயிராக சில பேர் தூங்கி வழிந்தார்கள்
அவ்வப்போது ஹீரோயின் அக்கா வந்து எழுப்பி விட்டாக .....
நானும் இந்த படத்தில் நடிச்சிருக்கேன் ஞாபகபடுத்தி போனாக ..........


இளைய தளபதி விஜய் ரசிகர்கள் தான் பாவம் மொத்தமாக குழம்பி திரிவார்கள்

போலீஸ் வேலைக்கு போலாமா??
வேண்டாமா ? ஒன்னும் புரியல

இடை வேளைக்கு முன்னால போலீஸ்
பின்னாடி ரவுடி முள்ளை முள்ளால் புடுங்கும் ஹீரோ விஜய்

இளிச்ச வாய் வில்லன் பொறுமையாக தானாக சின்னபுள்ளதனமாக அடிவாங்கும் பொறுமையான வில்லன் எவ்வளவு அடிச்சாலும் வாங்குறான் இவன் ரொம்ப நல்லவனொன்னு நினைக்க வைப்பதை டைரக்டர் திறமை ன்னுதான் சொல்லணும்

எங்க கைப்புள்ள கூட இப்படி அடிவாங்கினது இல்லல ????????


ஆக அடிக்கடி அனைவரும் பஞ்சத்துக்கு பன்ஜ் பேசி கொல்லும் படம்

விஜய் அருவியில் குதிப்பதை அபோகளிப்டவிலும் காப்பியடித்த டைரக்டர் பின்னணி மியூசிக் கோடா திருடியிருப்பது கேவலம் ....................... திருட தெரியாதவன் கூட இப்படி அப்பட்டமாக திருடிய ஸீன் +மியூசிக் பின்னி எடுக்கிறார்

கிளைமாக்ஸ் இந்திய வரலாற்றில் குருடன் கையில் துப்பாக்கி தந்து வில்லனை கொன்றோலிப்பது புதுமை



நம்ப முடியவில்லை கை தட்ட யாருமில்லை
காரி துப்பவும் முடியவில்லை இங்கே எச்சில் துப்பதீர் என்று அறிவிப்பு இருந்ததால்

இறுதியாக

வேட்டைக்காரன் நம் கண்களையும் காதுகளையும் பதம் பார்க்கும்
மொக்கை கத்திக்காரன்

தல அஜித் அடுத்த அட்டாக்அசல் வரும்வரை பொறுத்திருப்போம் ....................