பாகிஸ்தான் சிறையில் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி உள்ள இந்தியர் சரப்ஜித்சிங்குக்கு விடுதலை கிடைப்பதற்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இந்நிலையில், சரப்ஜித்சிங்கை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கு பதிலாக இந்திய சிறையில் உள்ள கொடிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் யாரையும் விடுதலை செய்து விடாதீர்கள் என்று சரப்ஜித்சிங்கின் மனைவி சுக்பிரீத் கவுர், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.எனது கணவருக்காக தீவிரவாதிகள் விடுவிக்கப்படுவதை நானோ, என் மகள்களோ விரும்பவில்லை. எங்களை விட நாடு பெரியது. தாயக நலனுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம். எனது கணவரை சந்திக்க அவரது சகோதரிக்கு விசா வழங்குவதுபோல், எனக்கும், என் மகள்களுக்கும் விசா வழங்க வேண்டும்.நிச்சயம் இவரை பாராட்ட வேண்டும்!
No comments:
Post a Comment