Wednesday, April 23, 2008
WEB DESIGNING GUIDE
இங்கே "webdesigning ஒரு அறிமுகம்" அத்தியாயம் தமிழில் Pdf வடிவில். Introduction to Web Design Chapter in Tamil pdf Download. Right click and Save.Download
Tuesday, April 22, 2008
பிரியங்கா ராஜீவ்காந்தி கொலையாளி நளினியை வேலூர் ஜெயிலுக்கு சென்று சந்தித்தது நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம். * கொலையாளிகளை சந்தித்து, அவர்களுக்கு சட்ட பூர்வமாக கொடுத்த தண்டனையை விட மிகப் பெரியதாக எனக்கு தெரிகிறது.* இது போல் வேறு எங்கும் நடந்திருக்கா என்று தெரியவில்லை( முன்பு போப் இது மாதிரி செய்ததாக ஞாபகம்), இந்த செயலின் மூலம் இவர் இந்திய நாட்டின் உயர்ந்த பண்பை நிலை நாட்டியுள்ளார். நிச்சயம் பலருக்கு இது Inspiration, சிலருக்கு கடுப்பாக இருக்கும்.* இதற்கு சிலர் அரசியல் சாயம் பூசுகிறார்கள், ஆத்மார்தமான சந்திப்பு தான் என்பது என் எண்ணம். * நிச்சயம் பிரியங்கா வருகை கலைஞருக்கு தெரிந்திருக்கும். ஆனால் எந்த பரபரப்பும் இல்லாமல் காதும் காதும் வைத்தது போல் செய்தது பாராட்டபட வேண்டியது. ( தெரிந்திருந்தால், நிச்சயம் தமிழ் நாடு காங்கிரஸ் கோஷ்டி பூசல் வேலூர் வரை சென்றிருக்கும் )* பிரியங்கா சட்டத்தை மீறினார் என்று சொல்லுகிறார்கள் ( இதை பற்றி கீழே தனியாக). உண்மைதான், சில சமயம் Exceptions இருக்கலாம் என்பது என் கருத்து. இதே போல் நாளை யாராவது கேட்டால் என்ன செய்ய போகிறது அரசு ? யாராவது கோர்ட்டுக்கு போனாலும் போகலாம். பார்க்கலாம். விதிமுறைகளும் மீறல்களும்... * ஜெயிலில் இருக்கும் கைதி ஒருவரை கைதி சம்மதித்தால் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று விதி உள்ளது. ஆனால் ஏராளமான கட்டுப்பாடுகளும், விதிமுறை களும் இதில் உள்ளன.பிரியங்கா நளினா சந்தித்தபோது பலவிதிமுறை களை மீறி இருப்பதாக தகவல்கள் வெளிவந் துள்ளன.* பிரியங்கா வருகை அவருடைய பாதுகாப்புபடை மற்றும் ஐ.பி. புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். வேலூர் பெண்கள் சிறை சூப்பிரண்டு மற்றும் உயர் சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.* ஜெயில் கைதிகளை சந்திக்க யார் வந்தாலும் வருகை பதிவேட்டில் அவர்கள் பெயர் விபரம் பதிவு செய்யப்படும். ஆனால் பிரியங்கா வந்த விபரம் எதுவும் குறிப்பிடாமல் ஒரு பார்வையாளர் நளினியை பார்க்க வந்தார் என்று மட்டும் பெயர் குறிப்பிடாமல் பதிவு செய்து வைத்துள்ளனர்.* பார்வையாளர் எத்தனை மணிக்கு வந்தார். எத்தனை மணிக்கு திரும்பி சென்றார். என்ற விவரங்களைபார் வையாளர் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் அதையும் பதியவில்லை.* கைதிகளை பார்க்க வருபவர் முறைப்படி ஜெயி லுக்கு விண்ணப்பம் அளித்து அதன் பின்னரே பார்க்க முடியும். ஆனால் பிரியங்கா விண்ணப்பம் கொடுத்ததாக தகவல் இல்லை.* தைகதிகள் பாதிக்கப்பட் டவரின் ரத்தம் சம்மந்தப் பட்ட உறவினர் என்றால் அவருடன் காவலர் ஒருவர் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதுவும் கடைபிடிக்கப்படவில்லை.* வேலூர் ஜெயிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பார்வையாளர்கள் கைதி களை பார்க்க அனுமதி உண்டு. ஆனால் பிரியங்கா புதன்கிழமை நளினியை சந்தித்து இருக்கிறார்.* சிறையில் பார்வையாளர் நேரம் பகல் 10மணிமுதல் பிற்பகல் 3மணிவரை என்று உள்ளது. தினமும் 100 பார்வையாளர்கள் மட்டுமே ஜெயிலுக்கு அனும திக்கப்படுவார்கள். அதுவும் மீறப்பட்டுள்ளது.* அரசியல் தலைவர்கள் ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் கைதியை சந்திப்பதாக இருந்தால் தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அதுவும் மீறப்பட்டுள்ளது.இப்படி பல விஷயங்களிலும் பிரியங்காவுக்காக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.உயர் அதிகாரி களிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
Thursday, April 10, 2008
பாக்கியநாதன் "எளிய தமிழில் ஜாவா" ஒரு தொழில்நுட்பப் பாட நூல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Bakiyanathan "Eliya Tamilil Java" Programming text ebook in Tamil pdf format Download. Right click and Save.Download(Oops...again link fixed
Wednesday, April 9, 2008
வறுமைக்கு காரணமும், விளைவுகளும்
செல்வசெழிபிற்க்கு அருகமையில், கடுமையான வறுமையய் காணும் பெரும்பாலான, மனிதநேயங்கொண்டவர்கள் இந்த முரண்பாட்டிற்க்கு காரணம் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளே என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர்.இரண்டாம் உலக்ப்போரில் முற்றிலும் அழிந்த ஜெர்மனியில், 1945ல் வறுமை, பசி, வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருந்தது. சந்தை பொருளாராத கொள்கைகளை, கடும் எதிர்பிற்கிடையில் அமல் படுதிய பின் பத்தே ஆண்டுகளில் ஜெர்மனி மீண்டும் தலை நிமிர்ந்தது. "ஜெர்மன் மிராக்கில்" என்று இன்றும் போற்றப்படுகிறது.1947இல், நம்மைவிட மிகவும் கீழ் நிலையில் இருந்த மலேசயா, சிங்கப்பூர், தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இன்று நம் நாட்டை விட பல மடங்கு சுபிட்சமாக உள்ளன. சைனாவும் முதலாளித்துவ பாதைக்கு வந்து, வேகமாக வளம் பெற்று வருகிறது.1950 முதல் இடதுசாரி, சோசியலிச கொள்கைகளை பின்பற்றியதின் விளைவாக, நாம் 1991ல் திவால் நிலையில் இருந்தோம். அரசு, தங்கத்தை அடமானம் வைத்து இறக்குமதிக்கான் டாலர்களை பெற வேண்டிய நிலை உருவானது. அதன் பிறகு, சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை அமல் படுத்தியதன் விளைவாக, இன்று மீண்டு வருகிறோம். பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் எழும்ப முடிந்தது. தொழில் துறையின் வளர்சியால் புதிய வேலை வாய்ப்புகளும், அரசுக்கு பெரிய அளவில் வரி வசுலும் உருவாகிறது. அதை வைத்து அரசு, பல நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. மத்திய அரசின் நிகர வரி வருமானம், 1995ல் 1,10,354 லச்சம் கோடியில் இருந்து 2007ல், 5.48,122 லச்சம் கோடியாக ஆக உயர்ந்தது. 1991இல், இரண்டு வார இறக்குமதிக்கான அந்நிய செலவாணி கையிருப்பே இருந்தது. இன்று சுமார் 100 மடங்கு அதிகரித்து, 8,64,000 கோடி ரூபாய் மதிப்பிற்க்கு டாலர் கையிருப்பு சேர்ந்துள்ளது. அந்நிய செலவாணிக்காக் I.M.F / World Bank இடம் கை ஏந்த வேண்டிய நிலை இன்று இல்லை.ராணுவதிற்க்காக வருடம் சுமார் 93,000 கோடி ரூபாய் செலவிடுவது நமக்கு மிக அதிகமான சுமை. இது போன்ற பல சுமைகளை விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியாக நாம் அனைவரும், குறிப்பாக ஏழைகளும் சுமக்க வேண்டியுள்ளது.இன்னும் வெகு தூரம் போக வேண்டியதுள்ளது. எழ்மை ஒழிப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிபடை வசதிகாளுக்காக அரசு பல லச்சம் கோடி ரூபாய்கள் செலவிட்டாலும், அதில் பெரும்பாண்மையான தொகை அரசு எந்திரத்தாலும், அரசியல்வாதிகளாளும் திருடப் படுகிரது. அரசு மான்ய தொகை, பணக்கார விவசாயிகளுக்கே பெரும்பாலும் சேர்கிரது. உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்கும்படி செய்ய, ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். அதுவே நமக்கு முதல் வேலையாகும். அதை செய்யாமல், வறுமைக்கு காரணமாக முதலாளித்துவ பொருளாராதார் கொள்கைகளை காரணமாக காட்டுதல் தவறு.
K.R.அதியமான்
விலைவாசி ஏன் உயர்கிறது ?
நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?
K.R.அதியமான்
கருப்பு பணத்தின் லீலைகள்
வருமான வரி, விற்பனை வரி மற்றும் இதர வரிகளின் சுமை மிக அதிகம். அதனால் மிகப் பெரும்பான்மையோர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரி வலையிருந்து தப்பும் பணம் கருப்பு பணமாகிறது. வரி ஏய்ப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் லஞ்சமாகப் பெறும் பணமும் இக்கருப்பு பொருளாதாரதில் சேர்கிறது.கருப்பு பணத்தை பாதுகாக்க குறுக்கு வழிகள் உள்ளன. பிணாமி நபர்களிடம் கொடுத்தல், ரியல் எஸ்டெட், பஸ் ரூட், மற்றும் பல இடங்களில் பதுக்குவார்கள்.காஞ்சி மடம் சீரழிந்தது கருப்பு பண நன்கொடைகளால்தான். அவ்வகையில் வரும் பணம் கணக்கில் வராததால், நிர்வாகிகளால் இஷ்டம் போல் செலவு செய்ய முடிந்தது. விளைவுகளை நாடறியும்..தொழில் கூட்டாளிகளை, நிர்வாகதில் இருக்கும் கூட்டாளி ஏமாற்றுதல் ; காசாளர் மற்றும் நிர்வாகிகள் கடை பணத்தை திருடுதல் போன்றவை பெருக முக்கிய காரணம், பெரும்பாலும் வியாபரம் கருப்பில் நடப்பதால்.. மொத்ததில் நேர்மை குறைந்து திருட்டுதனம் நாடு முழுவதும் பரவி விட்டது.கல்வி நிறுவனங்கள், அரசியல், சினிமா, ரியல் எஸ்டெட், பஸ் ரூட், நகை வியாபாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்றவைகளில் கருப்பு பணம் விளையாடுகிறது. யாரும் கவலை படுவதுமில்லை, பயப்படுவதுமிலை.வரி ஏய்ப்பு செய்யும் மக்கள், கொஞ்ச் கொஞ்சமாக அனைத்து சட்டங்களையும் மீற முற்படுகின்றனர். அதனால், அனைத்து துறைகளிலும் நேர்மை வெகுவாக குறைகின்றது. அனைத்து வகை வரிகளின் விகித்தை வெகுவாக குறைத்தால் மட்டுமெ நிலமையை சீராக்க முடியும். அதற்கு அரசின் வெட்டி செலவுகளை கடுமையாக குறைக்க வேண்டும். நடக்கற காரியமா ? சொல்லுங்கள் ?
நன்றி அதியமான் அவர்களுக்கு
வருமான வரி, விற்பனை வரி மற்றும் இதர வரிகளின் சுமை மிக அதிகம். அதனால் மிகப் பெரும்பான்மையோர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரி வலையிருந்து தப்பும் பணம் கருப்பு பணமாகிறது. வரி ஏய்ப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் லஞ்சமாகப் பெறும் பணமும் இக்கருப்பு பொருளாதாரதில் சேர்கிறது.கருப்பு பணத்தை பாதுகாக்க குறுக்கு வழிகள் உள்ளன. பிணாமி நபர்களிடம் கொடுத்தல், ரியல் எஸ்டெட், பஸ் ரூட், மற்றும் பல இடங்களில் பதுக்குவார்கள்.காஞ்சி மடம் சீரழிந்தது கருப்பு பண நன்கொடைகளால்தான். அவ்வகையில் வரும் பணம் கணக்கில் வராததால், நிர்வாகிகளால் இஷ்டம் போல் செலவு செய்ய முடிந்தது. விளைவுகளை நாடறியும்..தொழில் கூட்டாளிகளை, நிர்வாகதில் இருக்கும் கூட்டாளி ஏமாற்றுதல் ; காசாளர் மற்றும் நிர்வாகிகள் கடை பணத்தை திருடுதல் போன்றவை பெருக முக்கிய காரணம், பெரும்பாலும் வியாபரம் கருப்பில் நடப்பதால்.. மொத்ததில் நேர்மை குறைந்து திருட்டுதனம் நாடு முழுவதும் பரவி விட்டது.கல்வி நிறுவனங்கள், அரசியல், சினிமா, ரியல் எஸ்டெட், பஸ் ரூட், நகை வியாபாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்றவைகளில் கருப்பு பணம் விளையாடுகிறது. யாரும் கவலை படுவதுமில்லை, பயப்படுவதுமிலை.வரி ஏய்ப்பு செய்யும் மக்கள், கொஞ்ச் கொஞ்சமாக அனைத்து சட்டங்களையும் மீற முற்படுகின்றனர். அதனால், அனைத்து துறைகளிலும் நேர்மை வெகுவாக குறைகின்றது. அனைத்து வகை வரிகளின் விகித்தை வெகுவாக குறைத்தால் மட்டுமெ நிலமையை சீராக்க முடியும். அதற்கு அரசின் வெட்டி செலவுகளை கடுமையாக குறைக்க வேண்டும். நடக்கற காரியமா ? சொல்லுங்கள் ?
நன்றி அதியமான் அவர்களுக்கு
Tuesday, April 8, 2008
Thursday, April 3, 2008
Wednesday, April 2, 2008
வெள்ளைச் சட்டை - காக்கி பேன்ட்; அகலக் கறுப்புக் கண்ணாடி; சட்டைப் பாக்கெட்டுகளில் கத்தைகத்தையாகப் பேப்பர்கள்; ஆறேழு பேனாக்கள்; கையில் ஒரு விசில்; பேன்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கேமரா; எந் நேரமும் பாதுகாப்புக்கு ஏ.கே-47 இயந்திரத் துப்பாக்கியுடன் ஒரு காவலர் என வீதிகளில் கூட்டத்தில் ஒருவராக உலவுகிற இவர்... ‘டிராஃபிக்’ ராமசாமி!‘‘அதிகாலையில் ஏழு மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பிடுவேன். பஸ்லதான் போகணும். கூட்டம் நெருக்கியடிக்கும். எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லே, ஆனா, எனக்குப் பாதுகாப்புக்குன்னு இந்தத் துப்பாக்கியை வெச்சுக்கிட்டு என்னோடவே பஸ்ல வர்ற போலீஸ் தம்பிங்க தான் பாவம். கோடம்பாக் கத்தில் இருந்து கிளம்பினா, பஸ் லிபர்டியைத் தாண்டு றதுக்குள்ளவே நெருக்கியடிச்சு டிராஃபிக் முட்டிக்கும். உடனே பஸ்ல இருந்து இறங்கி, ரோட்ல டிராஃபிக்கை ஒழுங்குபண்ண ஆரம்பிச்சுடுவேன். தம்பிக்குத் தான் சிரமம், ஏ.கே. 47 துப் பாக்கியை வெச்சுக்கிட்டு என் பின்னாலயே ஓடி வரும்’’ என்று தன் பாதுகாவலரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் ராமசாமி.‘‘பி.அண்ட்.சி. மில்லில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு வெளியில் வந்த பிறகு, தினமும் ரோட்டில்தான் எனக்கு வேலை. 98-ல் பாரிஸ் கார்னரில் திடீர்னு ஒரு நாள் எல்லா சாலைகளையும் ‘ஒன் வே’ ஆக்கினாங்க. அதை எதிர்த்து நான் உண்ணாவிரதம் இருந்தேன். கூடவே, உயர் நீதி மன்றத்தில் வழக்கும் போட்டேன். ஒன் வே ஆக்கின காலத்தில் அந்தப் பகுதியில் 22 பேர் விபத்தில் இறந்து போனாங்க. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் போராடி, நீதிமன்றத்தின் மூலம் எனக்கு வெற்றி கிடைச்சுது. பாரிஸ் கார்னரில் போக்குவரத்து பழைய படியே மாறுச்சு. அதேபோல் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோதும் வழக்குத் தொடர்ந்து, அதிலும் ஜெயிச்சோம்.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, மீன்பாடி வண்டி மோதி யாராவது இறந்தா, அதுக்கு நஷ்டஈடு வாங்க முடியாது. காரணம், அந்த வண்டிகளுக்குப் பதிவே கிடையாது. 2.5 சக்தியுள்ள மோட்டார்களை வெச்சுதான் மீன்பாடி வண்டிகளை ஓட்டலாம். ஆனா, புல்லட் இன்ஜின் வெச்சு அசுர வேகத்தில் போய் மனிதர்களைப் பயமுறுத்தினாங்க. அவங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந் திருக்கேன்.அதே மாதிரி, இத்தனை அகலச் சாலையில் இவ்வளவு மாடிகள்தான் கட்டணும்னு சட்டம் இருக்கு. தி.நகர், உஸ்மான் சாலையோட அகலம் 85 அடி. அதில் தரைத் தளத்துக்கு மேல் மூணு மாடிகள் வரைதான் கட்ட முடியும். எப்போதும் சந்தடிமிகுந்த ரங்கநாதன் தெருவின் அகலம் 35 அடிதான். ஆனா, உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பல அடுக்கு மாடிகள் கட்டி வெச்சிருக்காங்க. அதை எதிர்த்து வழக்கு போட்டேன். அதிலும் எனக்கு வெற்றி. ‘சட்டத்தை மீறிச் செயல்படுவதற்கு அனுமதித்து சென்னை நகரின் அழகையே கெடுத்துவிட்டீர்கள். மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்!’னு உச்சநீதிமன்றமே இப்போ தமிழக அரசைக் கண்டிச்சிருக்கு. இது என் இடைவிடாத போராட்டத்துக்குக் கிடைச்ச முக்கியமான வெற்றி’’ என்கிறார் ராமசாமி.‘‘என் வழக்குகளில் நானே ஆஜர் ஆகிறேன். நான் சட்டம் படிக்கலை. ஆனா, தேவை கருதி ஓரளவு தெரிஞ்சு வெச்சிருக்கேன். நேர்மையும் கொள்கை யில் தெளிவும் இருந்தா போதும், நிச்சயம் நீதி கிடைக்கும். குறைந்தபட்சம் ஒரு தவறுக்கு எதிரா, குரல் கொடுத்தோம்கிற சந்தோஷமாச்சும் கிடைக்குமே!’’ என்கிறார் உற்சாகமாக!‘‘வழக்கை வாபஸ் வாங்கினா, லட்சக் கணக்கில் பணம் தர்றதா சில வணிக நிறுவனங்கள் ஆள் அனுப்பிப் பேசு வாங்க. சில பேர் என்னை மிரட்டிப் பார்ப்பாங்க. என் மேல் திருட்டு வழக்குப் போட்டிருக்காங்க. பிக்பாக்கெட் கேஸ் போட்டு ஜட்டியோட நிப்பாட்டி, ஸ்டேஷனில் கட்டிவெச்சு அடிச்சாங்க. அரை நிர்வாணமா என்னை ரோட்ல கைவிலங்கு மாட்டி, இழுத் துட்டுப் போனாங்க. நடுத்தெரு வில் என்னைக் கத்தியால் குத்தினான் ஒருத்தன். குத்தும்போது ஒரு இன்ஸ்பெக்டர் வேடிக்கை பார்த்துட்டிருந்த கொடுமையும் நடந்தது.ஒவ்வொரு முறை நான் நீதிமன்றத்துக்குப் போகும் போதும் என் உயிருக்குக் குறி வைக்கப்படுது. அதனால்தான் நீதிமன்றமே எனக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு கொடுத் திருக்கு. எனக்கு இது தேவை இல்லை. எவனாவது என்னைப் போட்டுத் தள்ளிட்டா தான், என்ன பண்ண முடியும்? ஆனா, அதிகாரிகளையும் அமைச் சர்களையும் பாதுகாக்கிறது மட்டும் அரசாங் கத்தோட கடமை இல்லை; நம்மை மாதிரி சாதாரண மனிதர்களையும் காக்கிற கடமை அரசுக்கு உண்டு என்பதற்கு உதாரணமாகத் தான் இந்த ஆயுதப் பாதுகாப்பை ஏத்துக் கிட்டேன்...’’ என்றுபேசிக்கொண்டே இருக்கும் ராமசாமி, தடாலென்று பாய்ந்து ஓடி, ‘நோ என்ட்ரி’க்குள் புகுந்த ஒரு வாகனத்தை மடக்கிப் பிடித்து ஃபைன் போட வைக்கிறார்.
சபாஷ்!
நன்றி -விகடன்
Tuesday, April 1, 2008
Subscribe to:
Posts (Atom)