புதியதலைமுறைக்கு முதலில் எனது வாழ்த்துகள்
நீண்ட நாட்களாக வளர் இளம் தலைமுறைகென நல்லதொரு இதழ் இல்லையே என்ற எனது கவலையை போக்கியது .அழகான வடிவமைப்பில் கருத்துள்ள
கட்டுரைகளை கட்டுகோப்பாக வெளிவருவதில் இருந்தே தெரிகிறது இது அனுவப வெற்றி கூட்டணி என்று , சினிமாவுக்கும் அரசியலுக்கும் (இரண்டும் சாக்கடையாகி போனது வேறு விஷயம் ) முக்கியத்துவம் தராமல் இருப்பது வியப்பு ,கடைசி வரை இந்த தரத்துடனும் ,பொலிவுடனும் சரியான விலையில் கிடைத்ததால் எத்தனை தலைமுறைக்கும் வேண்டுமானாலும் இந்த இதழ் நிலைத்திருக்கும் ,கணினி வேலை வாய்ப்பு ,மருத்துவம் ,கேள்விபதில் சந்தேகம் , என அதிகரித்தால் நல்லது .பொழுது போக்கும் இதழ்களுக்கு நடுவில் பொழுது போனால் திரும்பாது என்பதற்காக அறிவின் வாசல்கதவை அகலமாக திறந்து வைக்கும் புதியதலைமுறை இதழுக்கு ஒரு சிறப்பு வணக்கம்
No comments:
Post a Comment