காட்டு பூ
காட்டு பூ தன் பாட்டுக்கு பூக்கிறது
மணம் சேர்க்கிறது
மாலைக்குள் சிக்காமல்
மயிருக்குள் சிறைபடாமல் மனிதகரங்களால் கரை படாமல்
பூக்கிறது நிதமும்
வண்டுகளும் பறவைகளும் தேனுண்ண வண்ணத்து பூச்சிகளும் மட்டும் மகரந்த சேர்க்கை நடத்த யாரும் எதிர்பார்ப்பதில்லை யாரும் நீருற்றவில்லை
பறிக்க யாருமில்லை ...................... போதிலும் நிதமும் பூக்கிறது......... பூத்து கொண்டே இருக்கிறது ...........................
No comments:
Post a Comment