Tuesday, October 27, 2009

பகல் கொள்ளை ,ராக்கொள்ளை,

படம் திரையரங்கு என்றாலே இப்போதெல்லாம் பயம் எனக்கு
நல்லபடம் ,தரமான ,கண்ணையும் ,காதையும் பதம் பார்க்காத யதார்த்த சினிமாவை அவப்பபோது நண்பர்களின் பரிந்துரைத்தல் பேரில் சென்று பார்க்கலாம் என்றால்
டிக்கெட் விலைதாறு மாறாக இவர்களே நிர்ணயம் செய்து கொள்கிறார்கள் .முப்பத்தி ஐந்து ரூபாய் டிக்கெட் என்பது ரூபையகவும் ,இருபது ரூபாய் டிக்கெட் ஐம்பது ரூபாயாகவும் பகல் கொள்ளை ,ராக்கொள்ளை, என மொத்த ஜனங்களையும் ஏமாத்தி பிழைக்கும் இது போன்ற திரையரங்கம் செல்லாமல் இருபத்து ரூபாய்க்கு டிவிடி வாங்கி ஹாயாக வீட்டில் ஹோம் திடோரில் படம் பார்க்காமல் இருபார்களா நமது மக்கள் உங்கள் கொள்ளைக்கு தக்க பதிலடி பிளாட்பாரத்தில் திருட்டு டிவிடி

Sunday, October 25, 2009

பேராண்மை


பேராண்மை


பார்க்க தகுதியுள்ள படம் வரிசையில் சமீபத்தில் வெளிவந்தது வெற்றிகரமாக ஓடிகொண்டிருப்பது பொழுது போக்கு படங்களுக்கு மத்தியில் ,போரடித்து வேறு வழியில்லாமல் திரைகதை,,,,, என்னும் பெயரில் இவனுக கொடுக்கும் வலிகளை
பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து விட்டோம் என்ற பெயரில் வேறு வழியில்லாமல் மூன்று மணி நேரம் பொறுமையை சோதிக்கும் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமாக



ஒரு படம் இயற்கை விவசாயம் ,காடுகளின் முக்கியத்துவம் ,உலகமயமாக்கல் ,பொதுஉடைமை ,சுரண்டல் ,நவீன விவசாயம் என்ற பெயரில் மலட்டு விவசாயம்,,, ஆதிக்க வர்க்கத்தினரின் ஆதிக்க பாதிப்புகள்...........என சமூக அக்கறை கலந்து இந்த படம் வெளிவந்திருப்பது தனித்த பாதையில் கதை பயணம் செய்திருப்பது ............இடைவேளை வரை படம் நகரும் விதம் இடைவேளைக்கு பிறகு வழக்கம் போல சினிமாத்தனம் பதினாறு பேரை நான்கு பேர் கொண்ட குழு அழித்தொழிப்பது வழக்கமான தமிழ் சினிமா பாணி ..............வேறுவழியில்லை தயாரிப்பாளர் தப்பிக்க நூறு சதவீத நல்லபடம் எடுத்தல் தலையில் துண்டுதான் மசாலா கலப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்று

இயக்குனரின் முந்தய படமான" ஈ " உலகின் பேராளிவுக்கு வழிவகுக்கும்
"பயோவார் " நோய்கிருமிகளை பரப்பி அதற்கான மருந்து விற்பனை மூலம் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவது பற்றிய விழிப்புணர்வு படமாக அமைந்ததில் இயக்குனர் ஒரு சமூக அக்கறையுள்ள போராளி என்பது புலனாகும் ......

இயற்கை என்ற கடற்கரை காதலை அழகியல் குறையாமல் உப்புகற்று நம்மை வருடும் உணர்வோடு காட்சியமைத்த விதம் ஒளிப்பதிவுக்கு தரமான இடமளித்த தேசிய விருதும் பெற்றது நினைவில் இருக்கிறது

இனி படத்திற்குள் பயணம் செய்வோம்


விஜய் ,அஜித் ,சிம்பு ,சுள்ளான் ,சல்லி,சுள்ளி வரிசையில் டைட்டில் முடிந்தவுடன் வழக்கமான ஹீரோதன் புகழை தன் வாய்கிழிய புகழ் பாடும் ஒரு குத்து அறிமுக பாடல் என்று சலித்தால் ,,,,,,,,,,,,

காட்டுப்புலி என்னும் முதல் பாடல் அக்கறையோடு சமூக ,பிரச்சனைகளை சொல்லுகின்ற அழகான பாடல் .பழங்குடிகளது சிறப்பு ,வாழ்க்கை முறை உழைபாளிகளது உழைப்பு ,வனங்களின் வனப்பு ,என திரையில் விரியும் அத்தனை காட்சிகளும் அருமை ..........

குறிப்பாக சுத்தியலும் கதிரருவாவும் ஆணும் பெண்ணும் இணைந்து பிடிக்கும் அந்த ஒரு விநாடி காட்சி இயக்குனரின் பொதுஉடைமை சிந்தனை அழகாக வெளிபடுகிறது
தியேட்டரை விட்டு வெளிவந்த பின்னும் அழியாத ஓவியமாக கண்ணுக்குள் நிற்கும் .

வைரமுத்து இன்னும் அதே சிவப்பு சித்தாந்ததில் ,கம்யுனிச ,பகுத்தறிவு சிந்தனையுடன் பாடல் எழுதியிருப்பது அருமை

எங்கே போனாய் வைரமுத்து இத்தனை நாளாய் ????


தேயிலை மரமாகும் வளர விடுவதில்ல

(வளர விடாமல் வெட்டி வெட்டி இலை துளிர்க்க செய்து கிள்ளி கொழுந்தை பறிப்பது )

சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்ல

உயரத்தில் வாழ்கிறோம் உயரவில்லை வாழ்க்கை

தேயிலை தொழிலாளர்களின் வாழ்கையை இரண்டே வரிகளில் வடித்த வைர வரிகள் அவை கொஞ்சம் தேநீர் நிறைய வானம் எழுதிய வைர முத்து உங்களிடம் இன்னும் இது போன்ற தத்துவ பாடல்களை எதிர்பார்க்கிறது தமிழ் ரசிகர்கள் உலகம்




பழங்குடியிலிருந்து ஒரு இளைஞன் படித்து முன்னேறி வனத்துரையில் அரசு பணி பெறுவதென்பது சாதரமான ஒரு காரியம் அல்ல.

அதன் பிறகு மாணவிகளால் , உயர் அதிகாரிகளால் ஏளனம் செய்யபடுவதும் உண்மைகள் மிகை படுத்தாத யதார்த்தம் ...


மாணவிகளின் இரட்டை வசனம் ,கவர்ச்சி ,மிதம் மிஞ்சிய சண்டை கட்சிகள் ,சினிமாத்தனம் இவையெல்லாம் தேவை இல்லாத ..............என்றாலும்

சுதந்திர நாளில் மிட்டாய் கொடுத்து தேசிய கீதம் பாட சிறுவர்களை அணிவகுப்பது போல இன்றைய ரசிகர்களை திரையரங்கிற்குள் வரவழைக்க ,போரடிக்காமல் ,

ரசிகனை
தியேட்டரை விட்டு வெளியேற விடாமல் நகைசுவை கொஞ்சம் ,கவர்ச்சி கொஞ்சம் ,என சரிவிகிதமாக படத்தை வசனம் ,திரை கதை மூலமாக நகர்த்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் ,வடிவேலு பழங்குடி உறவினர்களை பார்த்து பேசும் வசனம் யதார்த்தம்


பெண்களை இதுவரைக்கும் கவர்ச்சி பதுமைகளாக ,அவர்தம் உறுப்புகளை விதம் விதமாக சித்தரிக்கும் கேவலமான திரைப்பட வரிசையில்
பெண்களின் வலிமைகளை ,திறமையை ,அறிவு கூர்மையைபடமாகியதர்க்ககவே படத்தின் இயக்குனரை மனம் விட்டு பாராட்டலாம் .


ஐந்து பெண்கள் ஒரு கதாநாயகன் என்று இதற்கு முன்பு நிறையா படங்கள் காம களியாட்டங்கள் நிறையா வந்துள்ளன ,வரப்போகின்றன ஏன் இது போல பெண்களின் திறமையை ,வலிமையை முன்னிறித்தி ஒரு படம் கூட எடுக்க வில்லை .தமிழ் திரையுலகம் சிந்திக்க வேண்டும் .

பெண் என்னும் பேராண்மை இந்த படத்தில் மிக அழகாக கதையம்சத்தோடு எளிவந்திருப்பது பாராட்ட பட வேண்டியது .

படத்தின் இரண்டாம் பாகம் சினிமாதனமகவும் சண்டை கட்சிகளுக்குள் நான் போக விரும்ப வில்லை அவைகள் வலுகட்டாயமாக திணிக்க பட்டிருப்பது அப்பட்ட உண்மை ,,,


இயற்கை மலைத்தொடர்கள் ,தேயிலை தோட்டங்கள் ,பழங்குடியினர் வசிப்பிடங்கள் ,அவர்த்தம் வாழ்க்கை மத்தியில் படமாக்கிய விதம் அருமை .பசுமை குறையாமல் படம் பிடித்த கேமரா மேனுக்கு பாராட்டுகள் ..


MGR காலத்திற்கு பிறகு எனெக்கு தெரிந்த்த வரையில் மக்கள் பிரச்சனைகளையும் ,வலியையும் பாட்டில் வைத்து கட்சி படுத்திய வெகு சில படங்களில் இதுவும் ஒன்று

நாயகன் :ஜெயம் ரவி

பழங்குடி இனத்தில் இருந்து வரும் ஒரு ஹீரோ ,உடல் வலிமை ,மன வலிமை ,இரண்டிற்கும் நிறையா திறமைகள் உள்ள நாயகன் ஜெயம் ரவி அடக்கத்தோடு நடித்திருப்பது பாராட்டுக்கு உரிய நடிகர் .முதல் பாடலே படத்தின் தரத்தையும் ,காட்சியமைப்பும் அருமை ,கம்பு சுத்துவது ,நடனம் ஆடுவது ,சண்டை போடுவது என தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகசரியாக பயன்படுத்தியுள்ளார் .


ஐந்து நாயகிகள்


சொன்னதை சொல்ளுமமாம் கிளிபிள்ளை போல இயக்குனர் சொன்னதை அப்படியே ஏற்று காடு ,மலை ,அட்டைகடி ,கரடு முரடு மலைபதைகள் ,நதிக்குள் நடைபயணம் என ம்குந்த சிரத்தையோடு அணு அளவும் பயம் இல்லாமல் நடித்த உங்கள் கூட்டணிக்கு விருது நிச்சயம் கிடைக்கும் ..

காதல படத்தில் சந்தியாவின் தோழியா அந்த காதல வயப்பட்ட பெண் நல்ல நடிப்பு மொத்தத்தில் இந்த கூட்டணி "வெற்றி கூட்டணி "

Monday, October 12, 2009

புதியதலைமுறை

புதியதலைமுறைக்கு முதலில் எனது வாழ்த்துகள்
நீண்ட நாட்களாக வளர் இளம் தலைமுறைகென நல்லதொரு இதழ் இல்லையே என்ற எனது கவலையை போக்கியது .அழகான வடிவமைப்பில் கருத்துள்ள
கட்டுரைகளை கட்டுகோப்பாக வெளிவருவதில் இருந்தே தெரிகிறது இது அனுவப வெற்றி கூட்டணி என்று , சினிமாவுக்கும் அரசியலுக்கும் (இரண்டும் சாக்கடையாகி போனது வேறு விஷயம் ) முக்கியத்துவம் தராமல் இருப்பது வியப்பு ,கடைசி வரை இந்த தரத்துடனும் ,பொலிவுடனும் சரியான விலையில் கிடைத்ததால் எத்தனை தலைமுறைக்கும் வேண்டுமானாலும் இந்த இதழ் நிலைத்திருக்கும் ,கணினி வேலை வாய்ப்பு ,மருத்துவம் ,கேள்விபதில் சந்தேகம் , என அதிகரித்தால் நல்லது .பொழுது போக்கும் இதழ்களுக்கு நடுவில் பொழுது போனால் திரும்பாது என்பதற்காக அறிவின் வாசல்கதவை அகலமாக திறந்து வைக்கும் புதியதலைமுறை இதழுக்கு ஒரு சிறப்பு வணக்கம்

Thursday, October 1, 2009

கிராமத்தில் வளர்ந்தது திரிந்த என் பால பருவம்

வாய்க்கால் மீன்கள்
கிணற்று குட்டிகரனக் குளியல்
நெருப்பில் சுட்ட மண் வேர்கடலை ,கப்ப கிழங்கு
திருட்டு இளநீர் ,தேங்காய்
ஒடித்த கரும்பு
கல்லெறிய காய்த்திருக்கும் மாமரம்
பழுத்து கொட்டிகிடக்கும் நாவல் பழ மரம்
நுங்கு அமுது தரும் பனைமரம்
புழுதி பறக்கும் கபடி விளையாட்டு
நில வெளிச்ச முற்றத்து முதியோர்களின் கதை புராணங்கள்
அம்மியில் அரைத்த ,
உரலில் இடித்த ,
ஆட்டுரலில் ஆட்டிய ,
விறகடுப்பில் வெந்த
பனை விசிறி
பாட்டியின் முந்தானை
கிராமத்தில் வளர்ந்தது திரிந்த என் பால பருவம்

சாலையோரம் பயணம் செய்யும் ஜன்னல் வழியாக பசுமையாக விரியும் ............................