Wednesday, November 25, 2009




"மௌனம் என்பதுஅமைதியாக இருப்பதல்ல

உள்ளே நிகழும் உரத்த சிந்தனை " --யாரோ


Thursday, November 19, 2009

பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை


உன்னை எப்போதும் உன்னை விட

உயர்ந்தவர்களோடு மட்டுமே ஒப்பிட வேண்டும்..........


அப்படியானால்தான் நீ உயர்வை சந்திக்க முடியும் ............


இந்த உலகம் முழுக்க முழுக்க பணத்தால் இயங்கும் ஒரு இயக்கம்

இங்கே பணம் பிரதானம் மற்றதெல்லாம் சாதாரணம் .


"இல்லானை இல்லாளும் வேண்டாள் "
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை" வள்ளுவன் வாக்கு பொருந்தியே நிற்கும் எக்காலத்திற்கும் எந்த நாட்டிற்கும் .

Monday, November 16, 2009

கடற்கரை மணல்வெளியில்







பின்நவீனத்துவ குழந்தை தொழிலாளர்கள் இவர்கள் லட்சங்கள் பெரும் இவர்களது சில வினாடி நடிப்பு ..........................

ஆயிரமாயிரம் காலடி தடங்கல்
உங்கள் காலடித்தடம் தெரிகிறதா ???


இசை இலவசம் கூடவே குழல் விற்பனைக்கு

இவர்கள் குழந்தை தொழிலாளர்கள்
ஏய் நாங்களும் நடிப்பமில்ல சான்ஸ் தர்றது ?????????????????
சென்னை மெரீனா கடற்கரை மாலை நேரம் ஆர்பரிக்கும் அலைகடலலை சில படங்கள் சிந்திக்க சில நொடிகள்









Tuesday, November 3, 2009


அண்மையில் சேலம் சென்றிருந்த பொழுது நண்பர் ஒருவர் இந்த ருசியான தகவலை கூறினார் திருநங்கைகள் ஒரு குழுவாக "மென்மை" பல்சுவை இட்லி கடை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் .அதிலும் விதம் விதமாக கீரை இட்லி ,காளான் இட்லி ,காய்கறி இட்லி ,பன்னீர் இட்லி ,ஐந்து வகை சட்னி ,ருசியான சாம்பார் ( நாக்கில் எச்சில் ஊருதில்ல) சொல்லி இன்று இரவு அங்கே சென்று சாப்பிட வேண்டும் என்று கூறினார் .
நமக்குள் மகிழ்ச்சி , ஏற்கனவே நாம் எழுதியிருந்த தொழில் முனைவோர் கட்டுரைகளுக்கும் ,
திருநங்கைகள் பற்றிய கவிதை வரிகளுக்கும் பின்னூட்டம் எழுதி என்னை ஊக்குவித்தனர் என் நண்பர்கள்.
இது போல இன்னும் நிறையா எழுத வேண்டும் என்று ,பெரும்பாலும் கற்பனைகளை நிஜத்தில் காணும் பொழுது ஏற்படும் மகிழ்வுக்கு அளவே இல்லை .
மாற்றம் என்ற ஒன்றுதானே மாறாத ஒன்று .இந்த மாற்றம் இன்று அவர்கள் வாழ்விலும் விளக்கேற்றியிருப்பது வரவேற்க கூடியது ,நாமும் பின்பற்ற பட வேண்டிய ஒன்று

"எனது ஆவல் இதுதான் திருநங்கைகள்
" பிச்சை எடுத்து அல்லது மிரட்டி சில்லறை வசூலிப்பது ,
பொது இடங்களில் பிறர் மனம் புண்படும் விதம் ,அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது முதலான செயல்களை இவர்கள் தவிர்த்து இவர்களும் மாற்ற வெகுஜனங்களை போலவே வாழ வேண்டும் .
அந்த கவிதை வரிகள் இவைகள் தாம்
ஒரு திருநங்கை பூ விற்றால் ஒரு திருநங்கை புத்தகம் விற்றால் வாங்குவீர்களா ??ஒரு திரு நங்கை சோப்பு ,செண்டு , பொருட்களை விற்கும் பிரதிநிதியாக உங்கள் அலுவலகம் வந்தால் அனுமதிப்பீர்களா ?????வாங்குபவர்களை பற்றி விற்பவன் கவலைபடுவதில்லை ஒரு நாளும் வாங்குபவனும் விற்பவன் பற்றி கவலை படாமல் இருந்தால் நலம் ..
ஆனால் இன்று அதை விட ஒருபடி மேலாக தரமான சுவை மிகுந்த இட்லிகளை மிகவும் நியாயமான விலையில் விற்பனை செய்கிறார்கள் என்ற போது இவர்களை போல எல்ல திருநங்கைகளும் இது போல சுய தொழில் அல்லது இன்னும் பிற பணிகளில் ஈடுபட்டால் எவ்வளவு நன்றாக இருக்க்கும் .
அங்கே அவர்களது புதிய முயற்சிக்கு மக்கள் ஆதரவுக்கு நிரம்பி வழியும் வாடிக்கையாளர்களே சாட்சி .
"தாய் விழுதுகள் அறகட்டளை " தாய்களால் கூட புறக்கணிக்க கூடிய வாய்ப்புள்ள இவர்களை வரவேற்று வாய்ப்பு கொடுத்து பயிற்சியும் ஊக்கமும் தந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது ....ஒருநாளேனும் சேலம் சென்றால் விசாரித்து இவர்கள் கடையில் வித விதமான இட்லிகளை சுவத்துபாருங்கள் அங்கே இவர்களது உழைப்பின் ருசி உங்களை மீண்டும் ஒருமுறை கேட்டு சாப்பிட்டுபின்னர் பொட்டலம் கட்டி வருவீர்கள் என்னை போலவே நீங்களும் .
மேலும் தகவல்களை படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
http://www.thehindu.com/2009/09/04/stories/2009090450570200.htm