Thursday, September 23, 2010

நேற்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும்
"கடவுள் தன்னை வணங்குபவர்களுக்கு பயந்து கொண்டு நாத்திகர்கள் வீட்டு கதவை தட்டி கொண்டிருக்கிறார்"

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு

Thursday, August 5, 2010

கடவுளை மறுப்பவன்

கடவுளை மறுப்பவன் அலைபேசியில் கடவுள் என்றொரு பெயரில் எண் பதியபட்டிருந்தது யாரென கேட்டேன்
முன்னாளில் காதலி இந்நாளில் மனைவி என்றொரு பதில் கிடைத்து

Saturday, April 10, 2010

Monday, March 29, 2010

அங்காடித்தெரு


அங்காடித்தெரு





வசந்த பலன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மற்றுமொரு குறிஞ்சியாய்

ஜெயமோகன் வசனத்தில் மற்றுமொரு யதார்த்த பாத்திர படைப்பு நிறைந்த
கவிதையாய்

புதுமுக அறிமுகத்தில் உண்மைகளை யாரும் சிந்திக்காத ,நினைத்தும் பார்க்காத மனிதர்களின் மறு பக்கத்தை வலியை சொல்லிய காரணத்திற்கு இயக்குனர் வசந்த பலனை நிச்சயம் பாராட்ட வேண்டும் ,
விவசாயம் பொய்த்து போன தென் மாவட்டங்களில் இருந்து பஞ்சம் பிழைக்க வரும் ஆண் பெண் இளைஞர்கள்,விற்பனை மனிதர்களாக அவர்களின் கதையை உண்மைக்கு வெகு அருகில் சென்று படம் பிடித்து ,
ulaippu சுரண்டல் பேர்வழிகளின் தோலுரித்து சமூக பொறுப்புள்ளசினிமாவை தரும் பாங்கு பாராட்டுதலுக்கு உரியது ,


தினம் தினம் மக்களால் நிரம்பி, பிதுங்கி வழியும் சென்னை மாநகர் கடை வீதிகளில் ,பிரம்மாண்டமாய் தென்படும் துணிக்கடைகள் ,அதில் வேலை பார்க்கும் மனிதர்கள் ,அவசரங்கள் ,சுரண்டல்கள் ,மனித உரிமை மீறல்கள் வேலை பார்க்கும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் ,அந்த உணவு கூடம் ,தூங்கும் பெரிய ஹால் ,களைப்பில் தூக்க வெறியில் குவியல் குவியலாய் தூங்கும் இளைஞர்கள் ,அவலங்களை ,சாடி ஒரு படம் (பாடம் ),வந்திருப்பது பார்க்கும் அனைவரையும் நிச்சயம் யோசிக்க வைக்கும் ,


கடை முதலாளிகள் ,இன்னம் பிற நிறுவன முதலாளிகள் மனசாட்ச்சியை பதறி உலுக்குவது நிச்சயம் ,

தொழிலாளர்கள் நலன் ,பாதுகாப்பு ,மனித உரிமைகள் ,

இவை யாவும் பேசப்படும் ,

இனியாவது நிறைய மாறுதல்களை கடை ,நிறுவனங்களில் வேலை பார்ப்போரிடமும் ,வேலை வாங்குவோரிடமும் ஏற்படுத்தும் .


சொல்லபடாத சங்கதிகள் ,அறியபடாத மனிதர்கள் ,அவர்கள் வாழ்வியல் ,அழகியல் ,அவலங்கள் ,ஆனந்தங்கள் என அனைத்தையும் படம் பிடித்த சமூக கருத்துகளை ,அவலங்களை தலையில் கொட்டி புரிய வைக்க வந்திருக்கும் இந்த படம் நிச்சயம் கொண்டாட பட வேண்டிய படம்

Wednesday, February 24, 2010

மீண்டும் பறக்கவே ஆசை எமக்கு

தோல்விகள் புதிதல்ல நமக்கும் நம்மை போன்றவர்க்கும்
மீண்டு வருவதும் ,எழுந்து நடப்பதும் ,உயித்தெழுவதும் ,அடிக்கடி நடக்கும் சாதரண நிகழ்வுகள்
போராட்டமே வாழ்க்கை ஆனபிறகு போராடுவதே ஆனந்தம் ,அந்தமும் கூட
போராட்டம், தோல்விகள், ஏமாற்றங்கள் இல்லாமல் நாங்களில்லை .....நாட்களும் நகருவதாயில்லை
விழுவோம் எழுவோம் பறப்போம் இளைப்பருவோம் ..........மீண்டும் தொடரும் முடிவதில்லை
தொடரவே விருப்பம் எங்களுக்கு ...............................

Tuesday, February 9, 2010

தமிழ் சினிமா கடந்த பத்தாண்டுகளில் -ஒரு மீள் பார்வை

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமா நிறையா மாறுதல்களை சந்தித்து உள்ளது ,கிட்டத்தட்ட வருடத்தில் ஐம்பது படங்கள் என்றால் கூட அறுநூறு படங்கள் வெளிவந்துள்ள நிலையில் எந்த படங்கள் வெற்றிகரமாக ஓடியது ? எந்த படங்கள் திட்டரை விட்டு ஓடியது ?ஏன் ஓடியது ?என்பதற்கான வினான்க்களும் அதற்கான விடைகளுமாக சாதாரண ரசிகன் என்கிற முறையில் எழுதப்படும் எழுத்து இந்த வலைபதிவு .காரணங்களை பாரபட்சம் பார்க்காமல் கத்தி முனையில் நின்று விமர்சனங்களை எதிர்கொள்ள ,எழுத கடமைபட்டுள்ள காரணத்தால் இதனை எழுதுகிறேன்.ஏம்ப்ப இந்த வேண்டாத வேலை உனக்கு என்றால் .நண்பர்கள் இதற்கு முந்தைய வலைபதிவுகளுக்கு கொடுத்த ஆதரவும் ,ஆலோசனைகளும் ,வாழ்த்துகளும்

Monday, February 1, 2010

தமிழ் படம் -இந்த படத்த பாத்துட்டவது திருந்துவானுன்களா ??






அன்னைக்கி பவர் கட்டு நம்ம ஊர்ல ,
சரின்னு திட்டேர் பக்கம் போன முதல் முதல் காட்சியை நியாயமான விலை கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்தேன் .

தமிழ் படம்

இந்த படத்த பாத்துட்டவது திருந்துவானுன்களா ??

அரைச்ச மாவை அரைப்பதும்

கரைச்ச புளியை கரைப்பதும்

தொடரும் இன்றைய தமிழ் சினிமா சூழலில்

ஹீரோயசத்தை ,காதல் காட்சிகள் ,பஞ்சு டைலாக்கை ,
வழக்கமான ரசிகன் யூகிக்க கூடிய கதை அம்சத்தை ,
குத்துபாட்டு ,நம்ப முடியாத சண்டை காட்சிகள்
அதுவும் ரஜினி ,கமல் ,விஜய், தல ,வால்,
என்று யாரையும் விட்டு வைக்காமல் கிழி கிழி என்று கிழித்திருப்பது படத்தின் பலம் ,

தளபதி வரிசை நாயகர்கள் இனிமேல் பன்ச் டைலாக் பேச இனி பயப்படுவாணுக ஏன்ன அந்த அளவுக்கு பன்ச் டைலாக் இந்த படத்தில் பஞ்சராக்க பட்டிருக்கிறது .



உண்மையில் வித்தியாசமான படம் ,

ஹீரோ இன்ட்ரோ காட்சியில் பான்ட் கிழிந்து ஜட்டி தெரிய நிற்கும் காட்சி ,

ஆண் பிள்ளைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் காட்சி ,

வில்லி ஆண் இளைஞனை கற்பழிக்க முயலும் காட்சி ,

முதன் முறையாக ஹீரோஇனி சண்டையை பார்த்து காதல் கொள்ளும் ஹீரோ ,

ஒரு ஆங்கில குடும்ப பாடல் கேட்டு குடும்பம் ஒன்றாக சேரும் காட்சி ,

என்று நிறைய மாற்று காட்சிகள் கைதட்டல்கள் ,சிரிப்பு சப்தங்களால் ,

திரை அரங்கம் நிரம்பி வழிகிறது ,



குறிப்பிட்ட ரசிகன் என்றில்லாமல் அனைவராலும் இந்த படம் ரசிக்க வைக்கிறது ,

முன்னணி
ஹீரோக்கள் ,இயக்குனர்கள் ,பாடல் ஆசிரியர்கள் ,என அனைவரையும் மரியாதையாக திட்டியிருப்பது தெளிவாக புரியும் .

திருந்துகய்ய
,ஒட்டுமொத்த இயக்குனர்களும் ,முன்னணி ஹீரோக்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்,,,


அதுவும் ஒரே பாடலில் காபி வருவதற்கும் ஹீரோ கஷ்டப்பட்டு ,கோடீஸ்வரன் ஆகும் காட்சி நல்ல செருப்படி ,இனிமேல் ஒரே பாடலில் உழைத்து முன்னேறுவது போல காட்ட யோசிப்பார்கள் கண்டிப்பாக .

விளங்காத வார்த்தைகள் கொண்ட அந்த தமிழ் பாடல் ஓமக சீய ,, தியட்டரில் கைதட்டல், அடிக்கடி கேட்ட பாடல் இதுவாக இருக்கும் ,ஹீரோ நல்ல நடிப்பு ,நகைச்சுவை ,நன்றாக செய்திருக்கிறார் .நல்ல தேர்வு ,அனைவரும் தங்கள் பங்களிப்பை நன்றாக செய்திருக்கிறார்கள் ,பறவை முனியம்மா தூள் படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒளிர்கிறார் .

இயக்குனர் அமுதன் ,தயாரிப்பாளர் அழகிரி தைரியமாக இப்படி ஒரு சவுக்கடி தமிழ் படங்களின் மீது வீசியிருப்பது உண்மையில் பாராட்டுக்கு உரியது .
.இரண்டாம் பாதியை ஜவ்வாய் இழுத்திருக்க வேண்டாம் ,சிறுவர்கள் ரசிப்பார்கள் ,

மொத்தத்தில் இந்த படத்தின் வெற்றி சிரிபொலி ,கைதட்டல்கள் ,நிரம்பி வழியும் இளைஞர் கூட்டம் ,இவை தான்

Friday, January 22, 2010

எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா அன்றும் இன்றும்

எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா அன்றும் இன்றும்

நீலகிரி மாவட்டத்தில் பொதுவாக ஏப்ரல் ,மே ,மாதங்களில்அனைத்து ஊர்களிலும் வசந்தகால திருவிழா என்று அனைவரும் கொண்டாடுவார்கள் .

சுமார் ஏழுநாட்கள் நடக்கும் இந்த திருவிழா ,ஊருக்கு பந்த கால் நடுவதில் இருந்து தொடங்கும் .அது முதல் யாரும் ஊரை விட்டு வெளியூருக்கு செல்ல கூடாது ,பண்டிகை முடிந்த பின்னர்தான் ஊருக்கு உறவினர் செல்ல வேண்டும் .


தேயிலை தோட்டங்களில் முதலில் எல்லைசாமி ,மலைச்சாமி ,மழைசாமிஎன்ற இந்த மூன்று சாமிகள் இயற்கை தெய்வங்கள் இவைகளுக்கு முதலில் படையல் ,பூசை ,என்று ஏழு நாட்கள் முன்பாகவே திருவிழா தொடங்கும் .பச்சஅரிசி மாவு ,கேழ்வரகு கூழ். அச்சுவெல்லம் ,புளியன்சாறு ,தேன்பலா,ஆரஞ்சு ,பெரிப்பழம்இவையெல்லாம் படைத்து திருவிழாவை ஆரம்பித்து வைப்பார்கள் .

நான்கு எல்லைகளிலும் பூசை நடக்கும் ,நான்கு மூலைகளிலும் படையல் ,வைத்து ஊரே அமர்க்களபடும் .........
ஊருக்கு நடுவில் இருக்கும் அம்மன் கோவில் பந்தல் போடுவார்கள் ,கோபுரங்கள் வண்ணம் பூசப்பட்டு ,சிற்ப்பங்கள் எண்ணெய்குளியல் எடுக்கும் ,பளிச்சென்று இருக்கும் ,முனீஸ்வரர் ,விநாயகர் சிலைகள் பளிச்சென்று இருக்கும் .அலங்கார வளைவுகள் ,வண்ண காகித தோரணங்கள் ,வெள்ளை காவி ,வண்ணங்கள் ஊரையே மொத்தத்தில் திருவிழா மயமாக காட்டிவிடும் .

பூசாரி அன்றிலிருந்து கோவிலில் தங்கி விடுவார் .அவரோடு துணை பூசாரி இரண்டு பொடியன்கள் ,அவர்கள் நண்பர்கள் என ஒரு பட்டாளமே கோவிலை ஒட்டி பழியஆய் கிடப்பார்கள் .பக்கத்து ஊரில் இருந்து சிறுவர்கள் சிறுமிகள் வந்து பார்த்து விட்டு போவார்கள் ,அவர்கள் ஊரிலும் திருவிழா வரும் ,அப்போது எங்க ஊர் சிறுவர்கள் அங்கு போவார்கள் .

நள்ளிரவு பூசை ,மாவிளக்கு பூசை ,மஞ்சள் நீர் , இப்படி மூன்று நாட்கள் நடக்கும் முக்கியமான திருவிழா .கரகாட்டம் .நாதஸ்வரம் ,மேளதாளம் ,தாரை ,தப்பட்டை ,
கோமாளிமேடை நாடகம் ,ஒரு சினிமா இப்படியாக எங்கள் ஊர் திருவிழா நடந்து முடியும் அழகே தனி ,


பதினைந்து வருடங்களுக்கு முன்பு கொண்டாடிய திருவிழா
இப்போது கொண்டாடும் திருவிழா ,நிறைய மாற்றங்கள் ,அதே கோவில் ,அதே பூசாரி ,அதே மக்கள் ஆனால் பழைய குதூகலம் ,மகிழ்ச்சி ,சிறப்புகள் ஏதும் இல்லாமல் விரைவாய் முடிந்துவிடுவது போல இருக்கிறது ,தொலைகாட்சிகள் மனிதர்களை பிரித்து வெகு தொலைவில் வைத்துள்ளது .சிறுவர்கள் நள்ளிரவு பூசைக்கு அதிகமாக வருவதில்லை .

பழைய திருவிழா ,அதை ஒட்டிய கொண்டாட்டம் ,குடி போதை ,சீட்டாட்டம் ,மைக் செட்டு அலப்பறை ,மேடை நாடகம் ,சிறுவர்களின் நடனம் ,விளையாட்டு போட்டி ,பானை உடைத்தல் ,ஓட்டபந்தயம் ,சாப்பாட்டு போட்டி இப்படி போட்டிகள்
இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ஏழு நாள் திருவிழா மூணு நாள் திருவிழாவாகி போனது ................

தொடரும்

Wednesday, January 20, 2010

மழை துளியின் ருசி

அகல விழி திறந்து
நீண்ட நாக்கு நீட்டி
முழுவதும் செவி திறந்து
வீழும் மழைத்துளியை
அண்ணாந்து கண்டு ,உண்டு ,கேட்டு ,....
மழையில் நனைதல் மூலம் மட்டுமே சாத்தியபடுகிறது ....

Monday, January 11, 2010

என் ஞாயிறுகள்

என் ஞாயிறுகள்
சனி ஞாயிறு விடுமுறைஎன்பதால் வெள்ளிகிழமை மாலை வீட்டிற்கு குதூகலத்துடன் பள்ளியை விட்டோடும் மாணவனை போல்

சனிக்கிழமை பொன் மாலை பொழுதின் நிமிடங்களில்
ஆரம்பிக்கிறது வீட்டிற்கு செல்வதான பயணம்..............


வளைந்து நெளிந்த கொண்டை ஊசி வளைவுகளின்
ஊடே எறும்பின் வேகத்தில்
மலையேற்ற அரசு பேருந்து பயணத்தில்
நள்ளிரவின் இருளை பிரித்து பயணம்
பேருந்து வானொலியில் பழையா பாடல்களை கேட்டவாறு மனம் மட்டும் பின்னோக்கி பயணிக்கிறது ..................

எப்படியேனும் கிடைத்து விடுகிறது
எனக்கு மட்டும் எளிதில் பேருந்து ஜன்னலோரம் ,,,,,,,,

ஜன்னல் திறந்தால் நடுங்கும் குளிரிலில் நீள்கிறது பயணம்
ஊர் வந்து நிறுத்தம் தாண்டியும் ஓடும் பேருந்தில்
இருந்து குதித்து இறங்கி ஓடி பின் நின்று
ஏற்றத்தில் மூச்சிரைக்க ஏறி கதவை தட்டி

முதிர்ந்த என் பெற்றோரால் கதவு
திறக்கும் பொழுது ஞாயிறு விடிந்து விடுகிறது ............

எனக்கான தேநீரும் ,இரவு உணவும் காத்திருக்கும் அடுப்படியில் ..............

Friday, January 8, 2010

என்னையே எழுதி விடுவது என்பது தீர்மானித்தேன் ....

என்ன எழுதுவது ??
என்று நீண்ட நாள் யோசித்த பிறகு
என்னையே எழுதி விடுவது என்பது தீர்மானித்தேன் ....
என் அனுபவங்கள் ,கடந்து வந்த பாதைகள் ,மனிதர்கள் ,சம்பவங்கள் , இப்படி நிறைய எனது பால்ய பருவங்கள் முழுக்க முழுக்க அனுபவங்களால் முற்றி நிரம்பி வழிகிறது ,,,,,,

சிறு வயது முழுக்க,இயற்கையான காற்று , மழை பிரதேசம் ,அடர்ந்த காடுகள் ,தேயிலை தோட்டம் ,பலா,மா ,நாவல்பழ ,பேரி ,
,ஆரஞ்சு தோட்டம் ,தேன் கூடு, என முழுக்க முழுக்க இயற்கை மதியி தவழ்ந்து வளர்ந்த நாட்கள் ...........புத்தகம் படிப்பது கூட உயர்ந்த பாறை அல்லது மரக்கிளை
இப்போது லேப்டாப்பில் நினைத்தால் சிரிப்பு வருகிறது ,சில நேரம் அழுகையும் வருகிறது ,மரமேறி சில வருடங்களா இருக்கும் , தலையில் சுமை சுமந்து பல நாட்கள் ஆகிறது ,,,,,,நெடுதூரம் க்காட்டு வழி நடந்து வெகு நாட்கள் ஆகிறது .......

கல்லூரி படிக்க வேண்டி காங்குரீட் நகர கட்டிட நகருக்குள் சிறை பட்ட நாட்கள் ,காற்று முதல் நீர் வரை எல்லாமே அழுக்கு, அமிலம் கலந்துதான் .
வேகமான நாகரீகம் அவசர துரித உணவு ,எல்லாம் பாக்கெட் அடைத்த மனிதனாய் உணர்ந்த நாட்கள் அவை ......


படித்து முடித்து வேலை தேடி அலைந்து ,சென்னை இன்னொரு நரகம் பேரிரைச்சல் ,முன்னம் பாதி பின்னம் பாதி வேகமாக அசுர கதியில் இயங்கும் இயந்திர மனிதர் கூட்டம் ,இயல்பை தொலைத்து இயந்திரமயமான வாழ்க்கை பிடிக்காமல் மீண்டும் கோயம்புத்தூர் வந்து செட்டில் ஆகி

வியாபார துறை அதுவும் விற்பனை பிரிவில் ,சாதாரண மனிதர்கள் முதல் சாமானியர்கள் வரை சந்தித்த அனுபவங்கள் மிகவும் விசித்திரமானது
நிறைய மனிதர்கள் சந்திப்பு ,சண்டைகள் ,சமாதானங்கள் ,சமரசங்கள் ,
என நீளும் இந்த வரிசையில் எழுதுவேன் என்னை ...................

அரசு துவக்க பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் அண்ணா பல்கலைகழக கணிப்பொறியியல் வரை

ஜாரே தமீன் பார் மற்றும் த்ரீ இடியட்ஸ்

இரண்டு படங்களை பார்த்தல்


நமது கல்வி முறையின்
குறைபாடுகளை சுட்டி காட்டும் படங்களாக வந்திருப்பது ,அப்பட்டமாக தெரியும் ஆறுதலான விஷயம் .வாழ்த்துகள்


ஆனால் நமது கல்வித்துறை புலிகள் அதெல்லாம் டூப்பு நாம தான் டாப்பு
என்று ஆங்கிலேயன் நமது நாட்டை விட்டு போன போது விட்டு சென்ற பழைய்ய்ய மெக்கல்ல கல்வி முறையை தொங்கி அதனால் மாணவர்களின் தலை வீங்கி கொண்டிருப்பது காலத்தின் கொடுமை ,,



மோசமான அடிமை கல்விமுறை
நிரம்ப நினைவு திறன் வளர்ப்பதாக மட்டுமே உள்ளதை யாராலும் மறுக்க முடியாது (படிக்க மறக்க மீண்டும் படிக்க மறக்க )

அரசு துவக்க பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் அண்ணா பல்கலைகழக பொறியியல் கணிப்பொறியியல் வரைக்கும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இந்த மனனம் செய்தல்
போட்டியில் தொடர்ந்தது முதல் மதிப்பெண் ,முதலிடம் வாங்க போராட்டம் ,,,,,,,,,,,


தாளில் எழுதுதல் பின்னர் மறந்து போக செய்தல் மீண்டும் மனனம் செய்தல்
அடுத்த தேர்வு ,அடுத்த பாடம் ,அடுத்த வகுப்பு ,


இப்போது உங்களில் நிறைய பேருக்கு தொடர்ந்தது
ஒரு பத்து திருக்குறள் சொல்ல இயலுமா ??


,பள்ளியில் படித்த ஆங்கில பாடல் வரிகளை பாட இயலுமா ??

,ஒம் விதி??
,நியூட்டனின் விதிகள் ?
OSI SEVEN LAYERS ???



சத்தியமாக தெரியாது .

படித்தல் பின்னர் மறக்கவும் ,மீண்டும் படிக்கவும் தயாராகுதல் என்பது தான் போதிக்க பட்டது ,கட்டயபடுத்தபட்டது , வகுப்பில் முதல் மாணவனாக வர இந்த தகுதிகள் போதுமானவையாக இருந்தது .

கல்லூரியில் நீண்ட ப்ரோக்ராம் வரிசைகளை,கணிதத்தின் வரிகளை ,ஏன் விடைகளை கூட மனனம் செய்யும் புலிகளை நண்பர்களாக கண்ட போது அதிர்ந்தே போனேன் .

கல்வி கூடத்தின் பதினேழு ஆண்டுகளில் உண்மையை சொல்வதானால் நல்ல முறையில் சுயமாக ஒரு கண்டுபிப்பும் செய்ய வில்லை ,படிக்கவும் இல்லை ,

மாநில ,மாவட்ட அளவில் கவிதை ,கட்டுரை என பரிசு பெற்றதே சாதனை என சொல்ல வேண்டும்,

தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும் ,என்று மட்டுமே நிர்பந்திக்க பட்டேன் ,

கற்பனைகளை கட்டுரைகள் ,சிறுகதைகள் ,கவியரங்கம் , திரையரங்கம் ,நாடக மேடைகள் என நிறைய செலவிட்டேன் , அதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய்ய்ய எதிர்ப்பை திணித்தார்கள் ......

கவிதை எழுத தமிழ் மொழியை கொஞ்சம் வசபடுத்தி கொண்டேன் ,உலக இலக்கியம் ,கவிதைகள் ,எழுத்தாளர்கள் என என்னை நானே நிரப்பியதன் விளைவே இந்த வலைப்பூ ....பதிவுகள்

பதினேழு ஆண்டுகளை கல்வி கூடங்களில் நான்கு சுவர்களுக்குள்
வீண் செய்து விட்டோமே!! என்ற குற்ற உணர்ச்சியும் எனக்கு உண்டு .

பின்னர் முதல் வகுப்பில் பட்டம் பெற்று ,நண்பர்கள் ஆரம்பித்த நிறுவனத்தில் வேலை பார்த்து .....
அங்கிருந்து கிளம்பி அதை போலவே சுயமாக ஒரு நிறுவனம் அமைத்து இப்படியாக ஒரு ஐந்து ஆண்டுகள்,,,,,,,,,,

நிம்மதியாக ,சுயமாக ,சுதந்திரமாக ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு

சில மாதங்கள் மட்டுமே படித்த வலைதள வடிவமைப்பு மென்பொருள் பயிற்சி மட்டுமே உதவியது ,உதவப்போகிறது .....என்பது தான் உண்மை .


இப்போது வார இறுதிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க சில கல்லூரிகளுக்கு செல்வதுண்டு இன்னமும் அதே மனனம் செய்யும் எந்திரங்களை காணும் போது மனம் வலிக்கிறது ............

ஏதோ சமச்சீர் கல்வி அது இதுன்னு சொல்லி கொள்கிறார்கள் .வந்தால் பரவாயில்லை பார்க்கலாம் .வரவிட மாட்டார்கள் போல . கல்வி கொள்ளையர்கள் பல பேர் இந்த நாட்டில் .


மாணவர்களை
புதியனவற்றை ,கண்டுபிக்கவும்,
சுயமாக படைப்பு திறனை ஏற்படுத்தவும்
தவறுகின்ற கல்வி முறையில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை ,

வீட்டில் இருந்ததே படித்து பட்டம் பெறுவது ,
கல்லூரி சென்று படித்து பட்டம் பெறுவது இரண்டும் ஒன்றா ??????????

நன்றாக இல்லை .கல்வி கட்டணத்தை,, நேரத்தை வேண்டுமானால் மிச்சம் செய்யலாம் ,,,,,அனுபவங்களை உங்களால் பெறவே முடியாது .
மேற்கத்திய அறிஞர்கள் ,விஞ்ஞானிகள் ,மேலாண்மை ,பொறியியல் ,மருத்துவம் ,என


யாரோ எழுதியவற்றை
நாமே எத்தனை நாள் தான் படித்து கொண்டிருப்பது .
மனனம் செய்து தேர்வுத்தாளில் மதிப்பெண் வேண்டி எழுதி தள்ளுவது .

புதிதாக எப்போது நீ எழுதுவது ......

..அதை எப்போது யார்??
படிப்பது என்பதல்லவா கேள்வி ????


அரசு ,கல்வி நிறுவனங்களின் மூலம் பணம் பார்க்க தொலை தூர கல்வி முறையை அமைத்து அவர்களை படிக்க வைத்து எழுத வைத்து பின்னர் மதிப்பெண் போட்டு பட்டம் தந்து வேலையை தராத இந்த கல்வி முறை எப்போது மாறும் ....

அறிவியல் ,பொறியியல் கண்டு பிடிப்புகள் இந்தியாவிலும் வருவதற்கு வாய்ப்பளிக்கும் கல்விதிட்டம்தான் தேவை


மேற்கண்ட எழுத்துகள் யாவும் எனது சொந்த அனுபவங்கள்
உங்களுக்கானது அல்ல .......


அனுபவங்களும் பகிவுகளும் தொடரும் ...............

Monday, January 4, 2010

காதலுக்கும் உண்டு கண்கள் நான்கு

மறக்கவும் மறுக்கவும் முடியாத நிகழ்வுகள் உண்டெனில் அது முதன் முதலாய் காதல் வந்த நாளைய்தான் இருக்க முடியும் ,

நன்றாக தெரியும் நமக்கு இது அதிகமென்று ,மிகையானதென்று ,படிக்கும் போது இதெல்லாம் ................

கண்களுக்கு ,இதயத்திற்கு எல்லாம் அழகைத்தான் ஆராதிக்க தெரியும் .
இனக்கவர்ச்சி அந்த வயதில் அதனை ,அதன் விளைபொருளை தந்தே தீரும் .

அதனால் யாரும் காதல் வயப்பட வில்லை என பொய் சொல்ல முடியாது


அதன் பின்னணியில் பின்ன பட்டிருக்கும் பொருளாதார ,சமூக வலைகள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை .

ஆனால் இந்த காலத்து காதல் ,காதலர்கள் ,

சொத்து ,சம்பாதனை , வேலை ,ஆடம்பரமான வாழ்க்கை ,பிள்ளைகளின் எதிர்காலம் !!!!!!!!!!!!!! குறித்த தெளிவான முடிவுகளுடன் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள் ,முடிவும் எடுக்கிறார்கள்

இது நல்ல ஆரோக்கியமான விசயம்தான் ,

எனக்கு தெரிந்த நண்பர்கள் காதலி ,காதலன் ,யாராகிலும் எதிர்கால பொருளாதார நிலைபாடுகளை கருத்தில் கொண்டு காதலித்து பின்னர் திருமணம் செய்வது எல்லோருக்கும் நல்லது ,

காதலித்து நன்றாக வாழ்ந்தவர்களையும் ,கெட்டு சீரழிந்தவர்களையும் ஒன்றாகவே பார்த்தவன் நான் .

பள்ளி நாள் முதல் கொண்டே சிலரது காதலுக்கு என் கவிதை நிரம்பிய காதல் கடிதங்கள் பயன்பட்டுள்ளன .

சிலரது காதலுக்கு என் அழகிய கையெழுத்து நிரம்பிய கடிதங்கள் பயன் பட்டுள்ளது .

இதற்கு கட்டணமாக டீயோ ,சிற்றுண்டியோ ,பணமோ ,அன்பளிப்போ அவப்போது பெறுவதுண்டு .

இங்கு காதல் கடிதங்கள் எழுதி தரப்படும் என்று போர்டு ஒன்று மட்டும் தான் வைக்கவில்லை ,,,

,பள்ளியில் இருந்து கல்லூரி வரை இதை ஒரு சமூக சேவையாக செய்து வருகிறேன் ,


அப்படி ஒரு நண்பன் பெயர் காளி ,படிக்க வில்லை ,டிரைவராக எங்கள் டி ஈஸ்டட்டில் வேலை அவனுக்கு,அவன் காதலி படித்தவள் படித்து கொண்டிருப்பவள் .....பக்கத்து ஊரில்

அவனுக்கு அடிக்கடி காதல் கடிதம் எழுதுவது, பதில் கடிதம் படித்து காண்பிப்பது நான்தான்.....


ஒருநாள் சுமார் ஏழு மணியிருக்கும் நிலவொளியில் நெடுஞ் சாலையோரம் ,தடுப்பு சுவற்றில் அமர்ந்தபடி ,

பெரிய காகிதத்தில் கவிதை கலந்த ,வார்த்தைகளால் குறைவான வெளிச்சத்தில், பென்சிலால் குத்து மதிப்பாக மீண்டும் படித்து பார்க்க இயலாத , எழுதிய காதல் கடிதமே நான் எழுதிய கடிதங்களில் மிக சிறந்தனவாக இருக்கிறது இன்று வரையில் .

பொக்கிஷம் சேரன் கூட இப்படி எழுதியிக்க வாய்ப்பில்லை ,

நான் எனக்கு கூட அப்படி எழுதி கொள்ளவில்லை .(அந்த சூழ்நிலை எனக்கு வாய்க்கவில்லை என்பது வேறு விஷயம் )

அந்த காதல் என்ன ஆனது தெரியுமா ???

அந்த பெண்ணின் வீட்டிற்கு காதல் விவகாரம் தெரிந்து பிரச்சனையாகி உடனடியாக பெண்ணிற்கு வேறிடத்தில் திருமணமாகி குழந்தையும் பிறந்து.

காளி காதல் தோல்வியால் பழைய சோகப்பாடல்கள் ,நடுத்தர மோகன் காதல் சோக கீதங்கள் என ஊருக்கே ஸ்பீக்கர் வைத்து அலறவிட்டது ..................வரலாற்றில் இன்னமும் அளிக்க முடியாதது ,

ஒரு வருடம் ஆனது

அதன் பிறகு தன் கணவனால் தனது பழைய காதல் கண்டறியப்பட்டு ,காதல் கடிதங்கள் படிக்கப்பட்டு (அத்தனையும் நான் எழுதியவைகள் ) தாய் வீட்டிற்கு அனுப்பபட்டாள் .....

காளி என் நண்பன் என்ன செய்தான் தெரியுமா?

தன் வீட்டை ,உறவினர்களை எல்லாம் எதிர்த்து தான் காதலித்த
அந்த பெண்ணை ,தன் காதலியை அந்த கைகுழந்தையோடு ஏற்று கொண்டான் .

முதன் முதலாக அந்த சமூக புரட்சியை யாரும் எதிர்பார்க்க வில்லை

நான் எழுதிய காதல் கடிதங்கள் இன்றைக்கும் அந்த தம்பதியினரால் நன்றோயோடு நினைவு கூறப்படுகிறது ,

அதன் பிறகு அவர்களுக்கும் ஒரு குழந்தை பிறந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகிறார்கள் .


வாழ்க காதல் ,வளர்க காதலர்கள் ,எழுதப்படட்டும் காதல் கடிதங்கள் ............மின்னஞ்சல் ,குறுஞ்செய்தி , வடிவம் மாறலாம் ........காதலின் படிவம் ஒன்று தான்

காதலுக்கும் உண்டு கண்கள் நான்கு