Tuesday, April 22, 2008

பிரியங்கா ராஜீவ்காந்தி கொலையாளி நளினியை வேலூர் ஜெயிலுக்கு சென்று சந்தித்தது நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம். * கொலையாளிகளை சந்தித்து, அவர்களுக்கு சட்ட பூர்வமாக கொடுத்த தண்டனையை விட மிகப் பெரியதாக எனக்கு தெரிகிறது.* இது போல் வேறு எங்கும் நடந்திருக்கா என்று தெரியவில்லை( முன்பு போப் இது மாதிரி செய்ததாக ஞாபகம்), இந்த செயலின் மூலம் இவர் இந்திய நாட்டின் உயர்ந்த பண்பை நிலை நாட்டியுள்ளார். நிச்சயம் பலருக்கு இது Inspiration, சிலருக்கு கடுப்பாக இருக்கும்.* இதற்கு சிலர் அரசியல் சாயம் பூசுகிறார்கள், ஆத்மார்தமான சந்திப்பு தான் என்பது என் எண்ணம். * நிச்சயம் பிரியங்கா வருகை கலைஞருக்கு தெரிந்திருக்கும். ஆனால் எந்த பரபரப்பும் இல்லாமல் காதும் காதும் வைத்தது போல் செய்தது பாராட்டபட வேண்டியது. ( தெரிந்திருந்தால், நிச்சயம் தமிழ் நாடு காங்கிரஸ் கோஷ்டி பூசல் வேலூர் வரை சென்றிருக்கும் )* பிரியங்கா சட்டத்தை மீறினார் என்று சொல்லுகிறார்கள் ( இதை பற்றி கீழே தனியாக). உண்மைதான், சில சமயம் Exceptions இருக்கலாம் என்பது என் கருத்து. இதே போல் நாளை யாராவது கேட்டால் என்ன செய்ய போகிறது அரசு ? யாராவது கோர்ட்டுக்கு போனாலும் போகலாம். பார்க்கலாம். விதிமுறைகளும் மீறல்களும்... * ஜெயிலில் இருக்கும் கைதி ஒருவரை கைதி சம்மதித்தால் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று விதி உள்ளது. ஆனால் ஏராளமான கட்டுப்பாடுகளும், விதிமுறை களும் இதில் உள்ளன.பிரியங்கா நளினா சந்தித்தபோது பலவிதிமுறை களை மீறி இருப்பதாக தகவல்கள் வெளிவந் துள்ளன.* பிரியங்கா வருகை அவருடைய பாதுகாப்புபடை மற்றும் ஐ.பி. புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். வேலூர் பெண்கள் சிறை சூப்பிரண்டு மற்றும் உயர் சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.* ஜெயில் கைதிகளை சந்திக்க யார் வந்தாலும் வருகை பதிவேட்டில் அவர்கள் பெயர் விபரம் பதிவு செய்யப்படும். ஆனால் பிரியங்கா வந்த விபரம் எதுவும் குறிப்பிடாமல் ஒரு பார்வையாளர் நளினியை பார்க்க வந்தார் என்று மட்டும் பெயர் குறிப்பிடாமல் பதிவு செய்து வைத்துள்ளனர்.* பார்வையாளர் எத்தனை மணிக்கு வந்தார். எத்தனை மணிக்கு திரும்பி சென்றார். என்ற விவரங்களைபார் வையாளர் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் அதையும் பதியவில்லை.* கைதிகளை பார்க்க வருபவர் முறைப்படி ஜெயி லுக்கு விண்ணப்பம் அளித்து அதன் பின்னரே பார்க்க முடியும். ஆனால் பிரியங்கா விண்ணப்பம் கொடுத்ததாக தகவல் இல்லை.* தைகதிகள் பாதிக்கப்பட் டவரின் ரத்தம் சம்மந்தப் பட்ட உறவினர் என்றால் அவருடன் காவலர் ஒருவர் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதுவும் கடைபிடிக்கப்படவில்லை.* வேலூர் ஜெயிலில் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பார்வையாளர்கள் கைதி களை பார்க்க அனுமதி உண்டு. ஆனால் பிரியங்கா புதன்கிழமை நளினியை சந்தித்து இருக்கிறார்.* சிறையில் பார்வையாளர் நேரம் பகல் 10மணிமுதல் பிற்பகல் 3மணிவரை என்று உள்ளது. தினமும் 100 பார்வையாளர்கள் மட்டுமே ஜெயிலுக்கு அனும திக்கப்படுவார்கள். அதுவும் மீறப்பட்டுள்ளது.* அரசியல் தலைவர்கள் ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் கைதியை சந்திப்பதாக இருந்தால் தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அதுவும் மீறப்பட்டுள்ளது.இப்படி பல விஷயங்களிலும் பிரியங்காவுக்காக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.உயர் அதிகாரி களிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

No comments: