Friday, September 25, 2009

ஈசா யோகா மையம் -உண்மையில் ஒரு காட்டுப் பூ

ஈசா யோகா மையம் -உண்மையில் ஒரு காட்டுப் பூ

இன்று அதிகாலை ரஜினியின் இமயமலை பாபா பற்றிய பயண விவாதம் நடந்து கொண்டிருந்தது . நேற்று இரவுதான் பாபா ,இமயமலை ,காட்டுவழி, மலைபயணம் குறித்த தொடர் விஜய் டிவி இல் ஒரு வாரமாக ஒளிபரப்பாகி இறுதியாக முடிவடைந்திருந்தது .

இமயமலை இருக்கட்டும் நமக்கு வெகு அருகில் இருக்கும் தென்கயிலை ,வெள்ளிங்கிரி மலை அடிவாரம் ,சத்குரு ஆசிரமம் ,ஈசா யோகமய்யம் ,தியானலிங்கம் போய் இருக்கிறீர்கள ? என்றார் ,நண்பர் அடிக்கடி ஈசா யோகமய்யம் சென்று அங்குள்ள தியனலிங்க மண்டபத்தினுள் அமர்ந்து சற்று தியானம் செய்து வருவது தெரியும் .

நமது நண்பரும் என்னை நீண்ட நாட்களாக ஈசா யோகா மய்யத்திற்கு வாருங்கள்
அங்குள்ள தியான லிங்கம் ,இயற்கை சூழல் ,மலை அடிவாரம் ,தூய்மையான காற்று
இவை பற்றி கூறி ஆசை மூடினார் .உடனே கிளம்பு .......

4D பஸ்ஸை காந்திபுரம் பேர்ந்து நிலையத்தில் பிடித்தோம் நல்லவேளை ஜன்னலோரமாக இருக்கை கிடைத்தது .

நிறையா பேர் ஈசா மையம் தான் வந்திருந்தார்கள் .

செல்வபுரம் பேரூர் தாண்டி வயல் வெளிகள் கிராம சாலைகளில் பயணம் ஆரம்பித்தது ... நகரத்தை தாண்டி தூரம் வந்திருந்தோம்

அழகான பாக்குமரங்களின் அணிவகுப்புகள் ,துள்ளியோடும் சிறு வாய்க்கால் ,ஓடைகள் ,
திராட்சை கொடிகள் ,வயல்களின் பயிர்களின் நடன அசைவுகள் ,சுத்தமான காற்று ,

அங்காங்கே
பேருந்து நிறுத்தம், கட்சிகொடிகள்,பெட்டிகடைகள் ,ஆரம்ப பள்ளிக்கூடங்கள் ,பள்ளி மைதான மாணவர்களின் விளையாட்டுகள் ,ஆடுமாடுகள் மேய்ச்சல் ,இவையெல்லாம் ஜன்னலோரம் அமர்ந்து ரசித்தபடி பயணம் தொடர்ந்தது ,

சுவாசிக்கும்
காற்றில் ஒரு கிராமிய மணம் கலந்திருத்தது ....

அழுக்கில்லாத காற்றையும் ,நீரையும் மனிதன் விலை கொடுத்து வாங்கி நுகரும் காலம் என்னை சற்று லேசாய் நெருடியது , ஓரிடத்தில் சுத்தமான பன்னீர் திராட்சை விற்பனைக்கு கொட்டி குவித்து வைத்திருந்தார்கள் ............

தூரத்தில் மலை தொடர்களும் பசுமையான மலை மடுக்களுமாக வெள்ளிங்கிரி மலைசாரல் தெரிந்தது வெள்ளிபனிமலை போல அங்கங்கே சிறு சிறு அருவி ஊற்றுகள் .....

இயற்கையின் மடியில் ஒவொருவரும் கைகுழந்தைகள் போல ஆர்வத்துடன் அழகை ரசித்தபடி ஈசா மையம் நோக்கிய பயணம் .................

முடிவாக பஸ் அந்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தி சென்றடைத்தது அங்கிருந்து ஒரு பூங்காவுக்குள் ,பண்ணை இல்லத்துக்குள் ,செல்வது போல
மண் சாலை இரு புறமும் கருவேல மரங்கள் மின் வேலிகள் ,வன பகுதி மிருகங்கள் எச்சரிக்கை ,,, அறிவிப்பு பலகைகள்

அமைதியும் பிரமிப்பும் எதிர்பார்ப்பும் மூன்றும் சேர ஒரு வித எதிர்பார்ப்புடன் அந்த மய்யத்தை அடைந்தோம் உள்ளே செல்ல செல்ல நிறையா ஆச்சர்யங்களும் ,பிரமிப்புகளும் ,வார்த்தைக்கு சிக்காத அனுவபமும் நமக்கு கிடைத்தன ,,,,,,,,,,,,,,,,

அது பற்றி அடுத்த இடுகையில் தொடரும் .............

No comments: