Tuesday, September 29, 2009

சினிமா சினிமா



அழகி ,ஆட்டோகிராப் ,வெயில் ,காதல் ,சுப்ரமணியபுரம் ,பூ ,பருத்திவீரன் ,வெண்ணிலா கபடி குழு ,பசங்க ,நாடோடிகள் ,

இவைதாம் நான் பார்க்க பரிந்துரைக்கப்பட்ட நல்ல படங்கள் ,செயற்கை தனம் இல்லாத சாதரண மனிதர்களை நிழலாக இல்லாமல் நிஜங்களாக பதிவு செய்யும்

இப்படங்கள் நிச்சயமா ஒரு மிகப்பெரிய சாதனை ,ரசிகர்களும் இதைதான் பெரிதும் விரும்பி கொண்டாடுகின்றனர்

மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுப்பிய படங்கள் ............கிராமத்து யதார்த்தமும்
உண்மையின் பிம்பமுமாக அசலாக வாழ்கையை வருடும் படங்கள் அமைவது தமிழ் சினிமாவின் நல்லகாலம் ....புதிய இயக்குனர்கள் ,புதிய முகங்கள் , தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பது சற்று ஆறுதலான விஷயம் ,கோடிகணக்கில் பணம் போட்டு தறுதலை தனமாக படம் எடுத்து தயாரிப்பாளர் கடன் பட்டு படம் ஓடாமல் வீணாகும் பணம் ,பல கோடி .நேர விரயம் ,(ரசிகனின் நேரமும் இதில் அடங்கும் )

பழைய படங்களில் வெற்றிகரமாக ஓடிய படங்களை மீண்டும் புதிதாக இளம் கதாநாயகர்களை வைத்து எடுத்தால் என்ன ???


ரத்தகண்ணீர் படம் சமீபமாக அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது MR ராதாவின் நடிப்பும் ,வசனங்களும் , சிரிப்பும் சிந்தனைக்கும் உரியவை .இந்தப்படத்தை மீண்டும் புதிய வார்ப்பில் வண்ணப்படமாக எடுத்தால் நிச்சயம் ஹிட்டாகும் .பில்லாவை போல ...............................

No comments: