Monday, December 28, 2009

பள்ளியில் நான் நடித்த நாடகங்களை

பள்ளியில் நான் நடித்த நாடகங்களை மீண்டும் எனக்குள்ளாக அசைபோட வைத்தது அந்த நிகழ்வு ...

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் தொண்டு நிறுவனம் ஒன்று என்னை நடுவராக அழைத்திருந்தது ,
அன்று குழந்தைகள் தினவிழா .
நான்,கவிஞர் சூரிய நிலா ,சென்னை வருவாய் இணை ஆணையர் நந்தகுமார் IRS ,மற்றும் அலுவலர்கள் என நிறைய பேர் அந்த இரண்டுநாள் கலைவிழாவில் கலந்து கொண்டோம் ,

பிள்ளைகள் நடனம் ,பாட்டு,திருக்குறள் ஒப்புவித்தல் ,தனி நடனம் ,குழு நடனம் ,என மொத்தத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களும் குழந்தைகளாக மாறித்தான் போனோம் .

மனதில் அனைத்து கவலைகள் ,வேலை ,நாங்கள் யார் ? ,எங்கள் வயது ,என மொத்தமாய் மறந்து கவலைகள் ஏதுமின்றி அவர்களோடு உண்டு ,விளையாடி ,இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவரை நன்றியோடு நினைவு கூர்கிறேன் .


குழந்தைகள் உலகம் மிகவும் விசித்திரமானது கவலை ,கடமை ,சூது ,வன்முறை ,பொறாமை , இவைகளுக்கெல்லாம் அர்த்தம் விளங்காத வயது .

நான் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது திருப்பூர் கொடிகாத்த குமாரனாக ,நடித்தேன்.

காங்கிரஸ் குல்லா வேண்டும் என நான் அலைந்து திரிந்தது கடைசியில் ,பள்ளி சீருடை ஒன்றை வெட்டி தைத்து குல்லை ரெடி ஆனது .

திருப்பூர் குமரன் நாடகம் -நான் கொடி பிடித்து கோசம் போட்டு ,தொண்டர்களை வழிநடத்தி செல்லும் போது ஆங்கிலேய காவல்துறை அதிகாரி ஒருவருடன் நீண்ட விவாதம் முடிவில் எனக்கு தலையில் தடியடி.

கொடியை பிடித்தபடி கீழே விழவேண்டும் வெள்ளை சட்டை வெள்ளை வெட்டி ,வெள்ளை குல்லாய் ,மண்ணில் விழுந்தேன் .தேசிய கொடி விழாமல் ,கர கோசம் பட்டையை கிளப்பியது ,சுற்றிலும் தேயிலை தோட்டத்து தாய்மார்கள் ,தந்தைமார்கள் ,சிறுவர்கள் ,

1992 ஆகஸ்ட் மதம் 26 ம நாள் பள்ளியில் நடந்ததது .

அன்று புகைப்படம் எடுத்து வைத்து கொள்ள இயலவில்லை , அடுத்து பாரதியார் ,கட்டபொம்மன் ,மருது சகோதரர்கள் ,வீர சிவாஜி ,என பக்கம் பக்கமாக வசனம் பேசி கைதட்டல்கள் ,எல்லார்க்கும் என் முகம் ,என் பெயர் பிரபலம் ஆனது ,


கடையியாக நான் மேடையில் நடித்தது என்றால் கல்லூரியில் இன்றைய கல்வி திட்ட குறைபாடுகளை ,மனனம் செய்கின்ற யந்திரகளை மட்டுமே உருவாக்கும் கல்வி திட்டம் குறித்த் நாடகம் ,தந்தை வேடம் எனக்கு ,முடித்து விரைவாக கவியரங்கம் ஓடியதாக ஞாபகம் ....

அதன் பிறகு ஒரு குறும்படம் நடித்தேன் temting tragedy நண்பர்கள் வட்டம் அப்போது அதிகம் எப்போதுமே .நிறைய நாடகம் நடித்ததால் நடிக்கும் கலை கைவந்த கலையாகி போனது .

இன்னமும் நடிக்க ஆசை மேடையோ ,திரையோ கிடைத்தால் ஒரு கை பார்க்க ஆசை ,வாழ்க்கை மேடையில் நித்தம் நித்தம் நடித்து ,ஒப்பனை ,உடை ,கலைத்து உறங்கும் பொத்து ஒவ்வொருவரும் நல்ல கைதேர்ந்த நடிகர்கள் என்பதை மறுக்க முடியுமா ??
ஆக

எல்லோரும் நடிகர்கள்
உலகமே நாடக மேடை --- சேக்ஸ்பியர்

No comments: