Monday, January 4, 2010

காதலுக்கும் உண்டு கண்கள் நான்கு

மறக்கவும் மறுக்கவும் முடியாத நிகழ்வுகள் உண்டெனில் அது முதன் முதலாய் காதல் வந்த நாளைய்தான் இருக்க முடியும் ,

நன்றாக தெரியும் நமக்கு இது அதிகமென்று ,மிகையானதென்று ,படிக்கும் போது இதெல்லாம் ................

கண்களுக்கு ,இதயத்திற்கு எல்லாம் அழகைத்தான் ஆராதிக்க தெரியும் .
இனக்கவர்ச்சி அந்த வயதில் அதனை ,அதன் விளைபொருளை தந்தே தீரும் .

அதனால் யாரும் காதல் வயப்பட வில்லை என பொய் சொல்ல முடியாது


அதன் பின்னணியில் பின்ன பட்டிருக்கும் பொருளாதார ,சமூக வலைகள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை .

ஆனால் இந்த காலத்து காதல் ,காதலர்கள் ,

சொத்து ,சம்பாதனை , வேலை ,ஆடம்பரமான வாழ்க்கை ,பிள்ளைகளின் எதிர்காலம் !!!!!!!!!!!!!! குறித்த தெளிவான முடிவுகளுடன் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள் ,முடிவும் எடுக்கிறார்கள்

இது நல்ல ஆரோக்கியமான விசயம்தான் ,

எனக்கு தெரிந்த நண்பர்கள் காதலி ,காதலன் ,யாராகிலும் எதிர்கால பொருளாதார நிலைபாடுகளை கருத்தில் கொண்டு காதலித்து பின்னர் திருமணம் செய்வது எல்லோருக்கும் நல்லது ,

காதலித்து நன்றாக வாழ்ந்தவர்களையும் ,கெட்டு சீரழிந்தவர்களையும் ஒன்றாகவே பார்த்தவன் நான் .

பள்ளி நாள் முதல் கொண்டே சிலரது காதலுக்கு என் கவிதை நிரம்பிய காதல் கடிதங்கள் பயன்பட்டுள்ளன .

சிலரது காதலுக்கு என் அழகிய கையெழுத்து நிரம்பிய கடிதங்கள் பயன் பட்டுள்ளது .

இதற்கு கட்டணமாக டீயோ ,சிற்றுண்டியோ ,பணமோ ,அன்பளிப்போ அவப்போது பெறுவதுண்டு .

இங்கு காதல் கடிதங்கள் எழுதி தரப்படும் என்று போர்டு ஒன்று மட்டும் தான் வைக்கவில்லை ,,,

,பள்ளியில் இருந்து கல்லூரி வரை இதை ஒரு சமூக சேவையாக செய்து வருகிறேன் ,


அப்படி ஒரு நண்பன் பெயர் காளி ,படிக்க வில்லை ,டிரைவராக எங்கள் டி ஈஸ்டட்டில் வேலை அவனுக்கு,அவன் காதலி படித்தவள் படித்து கொண்டிருப்பவள் .....பக்கத்து ஊரில்

அவனுக்கு அடிக்கடி காதல் கடிதம் எழுதுவது, பதில் கடிதம் படித்து காண்பிப்பது நான்தான்.....


ஒருநாள் சுமார் ஏழு மணியிருக்கும் நிலவொளியில் நெடுஞ் சாலையோரம் ,தடுப்பு சுவற்றில் அமர்ந்தபடி ,

பெரிய காகிதத்தில் கவிதை கலந்த ,வார்த்தைகளால் குறைவான வெளிச்சத்தில், பென்சிலால் குத்து மதிப்பாக மீண்டும் படித்து பார்க்க இயலாத , எழுதிய காதல் கடிதமே நான் எழுதிய கடிதங்களில் மிக சிறந்தனவாக இருக்கிறது இன்று வரையில் .

பொக்கிஷம் சேரன் கூட இப்படி எழுதியிக்க வாய்ப்பில்லை ,

நான் எனக்கு கூட அப்படி எழுதி கொள்ளவில்லை .(அந்த சூழ்நிலை எனக்கு வாய்க்கவில்லை என்பது வேறு விஷயம் )

அந்த காதல் என்ன ஆனது தெரியுமா ???

அந்த பெண்ணின் வீட்டிற்கு காதல் விவகாரம் தெரிந்து பிரச்சனையாகி உடனடியாக பெண்ணிற்கு வேறிடத்தில் திருமணமாகி குழந்தையும் பிறந்து.

காளி காதல் தோல்வியால் பழைய சோகப்பாடல்கள் ,நடுத்தர மோகன் காதல் சோக கீதங்கள் என ஊருக்கே ஸ்பீக்கர் வைத்து அலறவிட்டது ..................வரலாற்றில் இன்னமும் அளிக்க முடியாதது ,

ஒரு வருடம் ஆனது

அதன் பிறகு தன் கணவனால் தனது பழைய காதல் கண்டறியப்பட்டு ,காதல் கடிதங்கள் படிக்கப்பட்டு (அத்தனையும் நான் எழுதியவைகள் ) தாய் வீட்டிற்கு அனுப்பபட்டாள் .....

காளி என் நண்பன் என்ன செய்தான் தெரியுமா?

தன் வீட்டை ,உறவினர்களை எல்லாம் எதிர்த்து தான் காதலித்த
அந்த பெண்ணை ,தன் காதலியை அந்த கைகுழந்தையோடு ஏற்று கொண்டான் .

முதன் முதலாக அந்த சமூக புரட்சியை யாரும் எதிர்பார்க்க வில்லை

நான் எழுதிய காதல் கடிதங்கள் இன்றைக்கும் அந்த தம்பதியினரால் நன்றோயோடு நினைவு கூறப்படுகிறது ,

அதன் பிறகு அவர்களுக்கும் ஒரு குழந்தை பிறந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகிறார்கள் .


வாழ்க காதல் ,வளர்க காதலர்கள் ,எழுதப்படட்டும் காதல் கடிதங்கள் ............மின்னஞ்சல் ,குறுஞ்செய்தி , வடிவம் மாறலாம் ........காதலின் படிவம் ஒன்று தான்

காதலுக்கும் உண்டு கண்கள் நான்கு

No comments: