Friday, January 22, 2010

எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா அன்றும் இன்றும்

எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா அன்றும் இன்றும்

நீலகிரி மாவட்டத்தில் பொதுவாக ஏப்ரல் ,மே ,மாதங்களில்அனைத்து ஊர்களிலும் வசந்தகால திருவிழா என்று அனைவரும் கொண்டாடுவார்கள் .

சுமார் ஏழுநாட்கள் நடக்கும் இந்த திருவிழா ,ஊருக்கு பந்த கால் நடுவதில் இருந்து தொடங்கும் .அது முதல் யாரும் ஊரை விட்டு வெளியூருக்கு செல்ல கூடாது ,பண்டிகை முடிந்த பின்னர்தான் ஊருக்கு உறவினர் செல்ல வேண்டும் .


தேயிலை தோட்டங்களில் முதலில் எல்லைசாமி ,மலைச்சாமி ,மழைசாமிஎன்ற இந்த மூன்று சாமிகள் இயற்கை தெய்வங்கள் இவைகளுக்கு முதலில் படையல் ,பூசை ,என்று ஏழு நாட்கள் முன்பாகவே திருவிழா தொடங்கும் .பச்சஅரிசி மாவு ,கேழ்வரகு கூழ். அச்சுவெல்லம் ,புளியன்சாறு ,தேன்பலா,ஆரஞ்சு ,பெரிப்பழம்இவையெல்லாம் படைத்து திருவிழாவை ஆரம்பித்து வைப்பார்கள் .

நான்கு எல்லைகளிலும் பூசை நடக்கும் ,நான்கு மூலைகளிலும் படையல் ,வைத்து ஊரே அமர்க்களபடும் .........
ஊருக்கு நடுவில் இருக்கும் அம்மன் கோவில் பந்தல் போடுவார்கள் ,கோபுரங்கள் வண்ணம் பூசப்பட்டு ,சிற்ப்பங்கள் எண்ணெய்குளியல் எடுக்கும் ,பளிச்சென்று இருக்கும் ,முனீஸ்வரர் ,விநாயகர் சிலைகள் பளிச்சென்று இருக்கும் .அலங்கார வளைவுகள் ,வண்ண காகித தோரணங்கள் ,வெள்ளை காவி ,வண்ணங்கள் ஊரையே மொத்தத்தில் திருவிழா மயமாக காட்டிவிடும் .

பூசாரி அன்றிலிருந்து கோவிலில் தங்கி விடுவார் .அவரோடு துணை பூசாரி இரண்டு பொடியன்கள் ,அவர்கள் நண்பர்கள் என ஒரு பட்டாளமே கோவிலை ஒட்டி பழியஆய் கிடப்பார்கள் .பக்கத்து ஊரில் இருந்து சிறுவர்கள் சிறுமிகள் வந்து பார்த்து விட்டு போவார்கள் ,அவர்கள் ஊரிலும் திருவிழா வரும் ,அப்போது எங்க ஊர் சிறுவர்கள் அங்கு போவார்கள் .

நள்ளிரவு பூசை ,மாவிளக்கு பூசை ,மஞ்சள் நீர் , இப்படி மூன்று நாட்கள் நடக்கும் முக்கியமான திருவிழா .கரகாட்டம் .நாதஸ்வரம் ,மேளதாளம் ,தாரை ,தப்பட்டை ,
கோமாளிமேடை நாடகம் ,ஒரு சினிமா இப்படியாக எங்கள் ஊர் திருவிழா நடந்து முடியும் அழகே தனி ,


பதினைந்து வருடங்களுக்கு முன்பு கொண்டாடிய திருவிழா
இப்போது கொண்டாடும் திருவிழா ,நிறைய மாற்றங்கள் ,அதே கோவில் ,அதே பூசாரி ,அதே மக்கள் ஆனால் பழைய குதூகலம் ,மகிழ்ச்சி ,சிறப்புகள் ஏதும் இல்லாமல் விரைவாய் முடிந்துவிடுவது போல இருக்கிறது ,தொலைகாட்சிகள் மனிதர்களை பிரித்து வெகு தொலைவில் வைத்துள்ளது .சிறுவர்கள் நள்ளிரவு பூசைக்கு அதிகமாக வருவதில்லை .

பழைய திருவிழா ,அதை ஒட்டிய கொண்டாட்டம் ,குடி போதை ,சீட்டாட்டம் ,மைக் செட்டு அலப்பறை ,மேடை நாடகம் ,சிறுவர்களின் நடனம் ,விளையாட்டு போட்டி ,பானை உடைத்தல் ,ஓட்டபந்தயம் ,சாப்பாட்டு போட்டி இப்படி போட்டிகள்
இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ஏழு நாள் திருவிழா மூணு நாள் திருவிழாவாகி போனது ................

தொடரும்

No comments: